புவி அறிவியல் அமைச்சகம்

மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை வலுப்பெறுவதற்கு சாதகமான சூழல்

Posted On: 21 JUN 2020 8:45PM by PIB Chennai

தென்மேற்குப் பருவமழை குறித்து இந்திய வானிலைத் துறையின் கீழ் வரும் தேசிய பருவநிலை மையம், தில்லி, மண்டல வானிலை மையத்தின் அறிக்கை :

  • பருவ மழையின் வடபகுதி நிலை தொடர்ந்து கண்ட்லா, அகமதாபாத், இந்தூர், ரெய்ஸன், கஜுராஹோ, ஃபதேபூர், பஹ்ரைச் ஆகிய நகரங்கள் வழியாகத் தொடரும்.
  • ஒரு புயல் சுழற்சி மத்திய வெப்ப மண்டலப் பகுதி வரையில் விரிவடைந்து, வடக்கு உள்மாவட்ட ஒடிசா மற்றும் அண்டைப் பகுதிகளின் மேல் நிலை கொண்டிருக்கும்.
  • வடக்கு பஞ்சாபிலிருந்து காற்றழுத்த தாழ்பகுதி வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த வெப்பப் பகுதியில் நகரும். அது அடுத்த மூன்று தினங்களில் தெற்கு நோக்கி நகரும். இதன் விளைவாக வங்கக் கடலிலிருந்து வரும் கிழக்குப் பகுதி ஈரப்பதக் காற்று வலுப்படும். அது வடக்கு இந்தியப் பகுதிகளில் சிறிது காலம் நீடிக்கும் என அறியப்படுகிறது.


(Release ID: 1633303) Visitor Counter : 152


Read this release in: English , Urdu , Hindi , Manipuri