உள்துறை அமைச்சகம்
தில்லியில் கோவிட் 19 நிலை குறித்த வி.கே. பால் அறிக்கை: அமித் ஷா தலைமையில் உயர்நிலைக் கூட்டம்
Posted On:
21 JUN 2020 11:19PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவின் அறிவுறுத்தலின்படி தில்லியில் “கோவிட்-19” தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கான உத்திக்காக டாக்டர் வினோத் பால் தலைமையில் உயர்நிலைக் குழு கடந்த ஜூன் 14ம் தேதி அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை இன்று (ஞாயிறு, 2020, ஜூன் 21) மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர், தில்லி பிரதேச துணை நிலை ஆளுநர், தில்லி முதலமைச்சர், துணை முதலமைச்சர், குழுவின் தலைவர் டாக்டர் வி.கே. பால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலர்கள், தில்லி தலைமைச் செயலர் ஆகியோர் பங்கேற்றனர்.
டாக்டர் பால் தலைமையில் வகுக்கப்பட்ட முக்கிய தொற்றுத் தடுப்புக்கான உத்திகளில் முக்கியமானவை:
கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கான பகுதிகளை மறு வரையறை செய்வது, கண்காணிப்பைத் தீவிரமாக்குவது, கட்டுப்பாட்டுப் பகுதிகளில் செயல்பாடுகளைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவது ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
- ஆரோக்கிய சேது, இதிஹாஸ் ஆகிய செயலிகளின் மூலம் தொற்றுப் பரவலைக் கண்டறிதல் (Contact Tracing), தொற்றுக்கு ஆளானோரைத் தனிமைப்படுத்துதல் (Quarantining of Contacts).
- கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு உட்படாத வீடுகள் குறித்த விவரங்களையும் சேகரித்தல், கண்காணித்தல். இது தில்லி குறித்த ஒருங்கிணைந்த தகவல்களைப் பெறுவதற்குத் துணை புரியும்.
- கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டோரை பாதுகாப்பு மையங்களிலோ, வீட்டுத் தனிமையிலோ இருக்க வைத்திருத்தல். கோவிட் காப்பு மையங்கள் முறையாக இயங்கச் செய்தல், இப்பணிகளுக்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்திக் கொள்ளுதல் ஆகியவை அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
(Release ID: 1633302)
Visitor Counter : 254