புவி அறிவியல் அமைச்சகம்
இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் அடுத்த 4 முதல் 5 நாட்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய அதிக வாய்ப்பு
प्रविष्टि तिथि:
20 JUN 2020 8:40PM by PIB Chennai
இந்திய வானிலைத் துறையின், புதுதில்லியில் உள்ள தேசிய வானிலை முன் கணிப்பு மையம்/மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
- தென்மேற்குப் பருவமழையின் வடக்குப்பகுதி எல்லை வரம்பு, தொடர்ந்து காண்ட்லா, அகமதாபாத், இந்தூர், ரெய்சன், கஜுராஹோ, ஃபட்டேபூர், பஹ்ரைச் ஆகிய பகுதிகளில் கடந்துசெல்லும்.
- தென்மேற்குப் பருவமழை மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் மேலும் சில பகுதிகள் மற்றும் உத்தராகண்டின் சில பகுதிகளுக்கு ஜூன் 22, 23-இல் முன்னேறிச் செல்வதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 24, 25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த மேற்கு இமயமலைப் பிராந்தியம், மீதமுள்ள அரபிக்கடல் பகுதி, குஜராத் மாநிலம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளுக்குச் சென்றடையும்.
- சராசரி கடல் நீர் மட்டக் காற்றோட்டமானது, மத்திய பாகிஸ்தானிலிருந்து கிழக்கு மத்திய வங்காள விரிகுடா வரை, தெற்கு பஞ்சாப், ஹரியானா, தெற்கு உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், வடக்குக் கடலோர ஒடிசா மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 0.9 கிலோமீட்டருக்கு மேல் பரவியுள்ளது. தென்கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் மேல் பகுதி வரை சூறாவளி சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும். மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும். ஜூன் 21 முதல் 23-ஆம் தேதிவரை விதர்பா பகுதியில் கனமழை பெய்யக்கூடும். இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் மழையின் அளவு, ஜூன் 23-ஆம் தேதி முதல் அதிகரிக்கும். அந்தப் பிராந்தியத்தில் ஜூன் 23 முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- ராஜஸ்தானில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.
(रिलीज़ आईडी: 1633139)
आगंतुक पटल : 146