அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தில்லி தலைநகர்ப் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், பெரியஅளவிலான நிலநடுக்கத்திற்கு அறிகுறி அல்ல, எனினும் வலிமையானநிலநடுக்க வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை: வாடியா இமயமலை நிலவியல் ஆய்வு நிறுவனம்

Posted On: 19 JUN 2020 11:01AM by PIB Chennai

தில்லி தலைநகர்ப் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கம்,  தலைநகர்ப் பகுதியில் வழக்கத்திற்கு மாறானது அல்ல என்றும், இப்பகுதியில் உருவாகியுள்ள திரிபு ஆற்றலின் வெளிப்பாடு என்றும்,  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி அமைப்பான வாடியா இமயமலை நிலவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.  

நில அதிர்வு கட்டமைப்பு சரியாக உள்ளதால், தில்லி தலைநகர்ப் பகுதியில்  தற்போது ஏற்பட்ட  குறுகிய நிலநடுக்கம் முதல் சிறிய அளவிலான நிலநடுக்கம் வரை பதிவு செய்ய முடியும்  என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. 

நிலநடுக்கம், எங்கே, எப்போது, எந்த அளவு ஆற்றல் வாய்ந்தது என்பதை, தெளிவாக அறிந்துகொள்ள முடியாவிட்டாலும்,  கடந்த கால நில அதிர்வுகள், திரிபு மதிப்பீடுகள் போன்றவை மூலம், இப்பகுதியில் ஏற்படக்கூடிய பாதிப்பை உணர முடிகிறது.   தில்லி தலைநகர்ப் பகுதி,  இரண்டாவது அதிக நிலநடுக்க பாதிப்புக்கு ஆளாகக் கூடிய ( மண்டலம் 4)-ல் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதால்,  சில நேரங்களில், இதுபோன்ற பகுதிகளில் எந்த சலனமும் இன்றி காணப்படுவதுடன், பெரிய நிலநடுக்கத்திற்கு அறிகுறி இல்லாத,  சிறிய அளவிலான நிலநடுக்கமோ அல்லது எந்தவித அறிகுறியும் இல்லாமல் திடீரென பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும்.  தில்லி தலைநகர்ப் பகுதியில் உள்ள 14 சிறிய அளவிலான நிலநடுக்கப் பகுதிகளில்,  29 மே அன்று ரோத்தக் பகுதியில் ரிக்டர் அளவில் 4.6 அளவிற்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

----



(Release ID: 1632586) Visitor Counter : 180