புவி அறிவியல் அமைச்சகம்

கேரளாவில் 2020, ஜூன் 1ஆம் தேதி தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, 2020 ஜூன் 12ஆம் தேதி நிலவரப்படி கேரளாவின் முழுப்பகுதி, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, புதுச்சேரி, தெலங்கானா, ஆந்திரா, வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசாவின் பெரும்பாலான பகுதிகள், மேற்குவங்கம், சிக்கிம் மற்றும் மஹாராஷ்டிராவின் சில பகுதிகள் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய பகுதிகளில் முன்னேறியுள்ளது

प्रविष्टि तिथि: 12 JUN 2020 9:15PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்/ இந்திய வானிலைத் துறையின் மண்டல வானிலை மையம் அளித்த தகவலில் கூறியிருப்பதாவது:

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை ஜூன்1, 2020ஆம் தேதி தொடங்கியது (இயல்பான தேதியில்), அதன் பின் இது, 2020 ஜூன் 12ஆம் தேதி நிலவரப்படி கேரளாவின் முழுப்பகுதி, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, புதுச்சேரி, தெலங்கானா, ஆந்திரா, வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசாவின் பெரும்பாலான பகுதிகள், மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் மஹாராஷ்டிராவின் சில பகுதிகள் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய பகுதிகளில் முன்னேறியது.

 

  • பருவமழையின் வடஎல்லை(NLM), 2020, ஜூன் 12-ஆம் தேதி நிலவரப்படி அட்சரகை 18°N/தீர்க்கரகை 60°E, அட்சரகை 18°N/தீர்க்கரகை 70°E, ஹர்னாய், பாராமதி, பீட், வர்தா, ராய்ப்ர், சம்பல்பூர், பாரிபடா, பர்தாமன், சிலிகுரி, அட்சரேகை 27°N/தீர்க்கரகை 87.5°E, ஆகியவற்றைக் கடந்து செல்கிறது.(இணைப்பு 1)

 

  • இது வடகிழக்கு மாநிலங்கள் தவிர மேற்கண்ட பகுதிகளில் இயல்பான முன்னேற்றம் அடைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 6 நாட்கள் தாமதமாகியுள்ளது. 

 

2020 ஜூன் 11ஆம் தேதி வரையிலான தென்மேற்குப் பருவமழை:

நாடு முழுவதும், 2020 ஜூன் 11ஆம் தேதி வரையிலான இந்த ஆண்டின் மொத்த தென் மேற்குப் பருவமழை, நீண்ட கால சராசரி அளவை (LPA) விட 34 சதவீதம் அதிகம். இது முறையே 42 சதவீதம், 95 சதவீதம் & ஆம்ப்; வடமேற்கில் எல்.பி.ஏ க்கு மேல் 28 சதவீதம், மத்திய & ஆம்ப்; தெற்கு தீபகற்பம் இந்தியா.

தென் கிழக்கு அரபிக்கடலில் உருவான இரண்டு காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தென்மேற்குப் பருவமழை குறித்த காலத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தக் காற்றழுத்தம் நிசர்கா புயலாகத் தீவிரம் அடைந்து, தெற்கு மகாராஷ்டிரா கடற்கரையை 2020 ஜூன் 2-5ஆம் தேதிகளில் கடந்தது.  கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவான மற்றொரு குறைந்த காற்றழுத்தம், தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி 2020 ஜூன் 7-12 தேதிகளில் நகர்ந்தது.


(रिलीज़ आईडी: 1631352) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , हिन्दी , English