தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சிகள் அவசியம் என திரு.கங்க்வார் வலியுறுத்தல்.

Posted On: 12 JUN 2020 6:48PM by PIB Chennai
  • குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான தினமான ஜுன் 12, 2020 அன்று மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறையும், வி.வி.கிரி தேசியத் தொழிலாளர் பயிற்சி மையமும், புதுதில்லியில் உள்ள .நா. சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து, “கோவிட்-19 : குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்போம் -முன் எப்போதையும் விட தற்போது கூடுதல் முயற்சிகள் அவசியம்என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்த ஆண்டு, உலகக் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தினம் 2020-இல், குழந்தைத் தொழிலாளர்களிடம் கோவிட்-19 ஏற்படுத்திய பாதிப்பு என்பது மையக்கருத்தாக விவாதிக்கப்பட்டது.
  • இணையவழிக் கருத்தரங்கை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.சந்தோஷ் குமார் கங்க்வார் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க, திரு.கைலாஷ் சத்யார்த்தி மற்றும் சர்வதேச அமைப்பு ஆகியோரின் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டினார். ஒவ்வொரு குழந்தையும், எந்தவொரு நாட்டிற்கும் ஒருங்கிணைந்த அங்கமாக திகழ்வதாகவும், அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அதிகாரமளிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். ஆண்டுதோறும் ஜுன் 12ஆம் தேதி, உலகக் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தினமாக கடைபிடிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க இந்தியா உறுதி பூண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். குழந்தைத் தொழிலாளர் ( தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்)திருத்தச்சட்டம், 2016 நிறைவேற்றப்பட்டது, மத்திய அரசின் மகத்தான சாதனை என்றும் அவர் தெரிவித்தார். தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டப் பயிற்சி மையங்களுக்கான உதவித்தொகை, 150 ருபாயிலிருந்து 400 ருபாயாக அதிகரிக்கப்பட்டது உட்பட, குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் 182 மற்றும் 183-வது உடன்படிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தது, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில், இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாகவும் அமைச்சர் கூறினார். குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் வலியுறுத்தினார்.

தொடக்க விழாவினைத் தொடர்ந்து, “ கோவிட்-19: பல்வேறு துறைகளிலும் குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்போம்மற்றும்மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தடைகளும், தீர்வுகளும்என்ற தலைப்புகளில், இரண்டு தொழில்நுட்ப ரீதியான அமர்வுகளாகப் பிரிந்து விவாதிக்கப்பட்டது.



(Release ID: 1631243) Visitor Counter : 208