புவி அறிவியல் அமைச்சகம்

தென்மேற்குப் பருவமழை, தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், மேற்கு மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடலின் பல பகுதிகளிலும், மிசோரம், மணிப்பூர், திரிபுரா மாநிலங்களின் பல பகுதிகளிலும், அசாம், நாகாலாந்தின் சில பகுதிகளிலும் முன்னேறியுள்ளது

प्रविष्टि तिथि: 10 JUN 2020 8:59PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / மண்டல வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளதாவது:

  • தென்மேற்கு பருவமழை, தமிழ்நாட்டின் எஞ்சிய பகுதிகளிலும், மேற்கு மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடலின் சில பகுதிகளிலும், மிசோரம், மணிப்பூர் மற்றும் திரிபுராவின் பல பகுதிகளிலும், அசாம், நாகாலாந்து மாநிலங்களின் சில பகுதிகளிலும் மேலும் முன்னேறியுள்ளது.
  • பருவமழையின் வடஎல்லை, கார்வார், ஷிமோகா, தும்குரு, சித்தூர், அகர்தலா  மற்றும் கொஹிமாவின் வடகிழக்கு பகுதிகள் வழியாகச் செல்கிறது.
  • மத்திய அரபிக் கடல், கோவா, மகாராஷ்டிராவின் சில பகுதிகள், கர்நாடகா மற்றும் ராயலசீமாவின் பல பகுதிகள், ஆந்திரப்பிரதேசத்தின் கடலோரப் பகுதி மற்றும் தெலங்கானாவின் சில பகுதிகள், வங்கக் கடலின் மத்திய வடக்குப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகள் ஆகியவற்றில் அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகிக் கொண்டுள்ளது.
  • மகாராஷ்டிராவின் பல பகுதிகள், கர்நாடகா, தெலங்கானா, ராயலசீமா, ஆந்திரப்பிரதேசத்தின் கடலோரப் பகுதி, வங்கக் கடல், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் மேலும் சில பகுதிகள், சிக்கிம் மாநிலம் மொத்தம், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழை, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் முன்னேறுவதற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

----


(रिलीज़ आईडी: 1630832) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri