புவி அறிவியல் அமைச்சகம்

தெற்கு கர்நாடகத்தின் உட்பகுதி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், மற்றும் வங்கக் கடலின் பெரும்பான்மையான பகுதிகள் ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழை முன்னேறியுள்ளது

प्रविष्टि तिथि: 06 JUN 2020 8:18PM by PIB Chennai

தெற்கு கர்நாடகத்தின் உட்பகுதி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால்,
மற்றும் தென்மேற்கு வங்கக் கடலின் பெரும்பான்மையான பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடலின் முழுமையான பகுதி, கிழக்கு வங்கக் கடலின் மேலும் சிலபகுதிகள், மேற்கு மத்திய மற்றும் வடகிழக்கு வங்கக் கடலின் சில பகுதிகள் ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழை முன்னேறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.


பருவ மழையின் வடக்கு எல்லை, தொடர்ந்து கார்வார், ஹாசன், சேலம், புதுச்சேரி வழியாக கடந்து செல்லும்.


தென்மேற்கு பருவ மழை அடுத்த 23 நாட்களில் கர்நாடகாவின் மேலும் சில பகுதிகள், மொத்த தமிழ்நாடு, ராயலசீமா மற்றும் தெலங்கானாவின் சில
பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடலின் மொத்தப் பகுதி, மத்திய மற்றும்
வடகிழக்கு வங்கக் கடலின் மேலும் சில பகுதிகள், வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் ஆகியவற்றில் முன்னேற சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.


கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதன் அருகே உள்ள வடக்கு அந்தமான் கடல் ஆகியற்றின் மேலே சராசரி கடல் மட்டத்திலிருந்து 3.1கி மீட்டருக்கும் 5.8 கி மீட்டருக்கும் இடையேயான உயரத்தில் ஏற்பட்டுள்ள சூறாவளிச் சுழற்சி தொடர்ந்து அங்கேயே நிலை கொண்டுள்ளது.
2020 ஜூன் 8 ம் தேதி வாக்கில் கிழக்கு மத்திய வங்கக்கடலுக்கு மேலே
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்படக் கூடும்.

 


(रिलीज़ आईडी: 1630038) आगंतुक पटल : 233
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Manipuri