அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறை வெப்பநிலையில் காட்சித் திரைக் கருவிகளுக்கு பயன்படுத்தக் கூடிய புதுமையான செயற்கை ஒளிஉணர் கொலஸ்ட்ரிக் திரவ படிகங்களை சிஇஎன்எஸ் மையம் உருவாக்கி உள்ளது.
प्रविष्टि तिथि:
06 JUN 2020 5:59PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் பெங்களூவில் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான நானோ மற்றும் மென்சடப்பொருள் அறிவியல்களுக்கான மையத்தின் (CeNS) விஞ்ஞானிகள் பரவலான வெப்பநிலைப் பயன்பாடுகளுக்கான, புதுமையான, அறை வெப்பநிலையில் ஒளிஉணர் கொலஸ்ட்ரிக் திரவ செயற்கைப் படிகங்களின் தொடர்வரிசையை உருவாக்கியுள்ளனர். திரும்பவும் அழித்து எழுதக்கூடிய ஒளிவடிவப் பலகைகள், விளம்பரப் பலகைகள் மற்றும் இது போன்ற ஒளிசார் சேமிப்புக் கருவிகளைத் தயாரிப்பதற்கு இந்த செயற்கைப் படிகங்கள் உதவியாக இருக்கும்.
திரவப் படிகங்கள் மனித வாழ்க்கையின் ஒருங்கிணைந்த அங்கமாக மாறியுள்ளன. உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் கம்ப்யூட்டர், மொபைல், டிவி போன்ற அதிநவீன காட்சிக்கருவிகளின் திரைகள் திரவப் படிகங்களால் தான் தயாரிக்கப்படுகின்றன. கொலஸ்ட்ரிக் திரவ செயற்கைப் படிகங்கள் என்பவை சிறப்பு வகை பொருள்களாகும். தனது அலைவரிசைக்கு சம அளவிலான அலைவேகத்தைக் கொண்டுள்ள ஒளியைப் பிரதிபலிக்கும் தன்மை இந்தப் பொருள்களுக்கு இருக்கின்றது. இந்த அலைவேகம் வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும். எனவே இவை பெரும்பாலும் வெப்ப உணர் பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய கொலஸ்ட்ரிக் திரவ செயற்கைப் படிகங்கள் ஒளி உணர் பொருள்களாக மாற்றப்படும் போது இவற்றை ஒளி சேமிப்புக் கருவிகளாகவும் மற்றும் இதனோடு தொடர்புடைய பயன்பாடுகளுக்கும் பயன்படுத்த முடியும்.
மேலும் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1629912
(रिलीज़ आईडी: 1630036)
आगंतुक पटल : 256