நிதி அமைச்சகம்

அரசின் தங்கப் பத்திரத்திட்டம் 2020-21 (தொடர் III) - வெளியீட்டு விலை

Posted On: 05 JUN 2020 9:14PM by PIB Chennai

இந்திய அரசு அறிவிப்பு எண் (F.N0) ஏப்ரல் 13, 2019 தேதியிட்ட 4 (4) -B / (W&M) / 2020, அரசின் தங்கப்பத்திரங்கள் 2020-21 (தொடர் III) ஜூன் 08-12, 2020 காலகட்டத்தில் திறக்கப்படுவதுடன், தீர்வு தேதி ஜூன் 16, 2020 ஆக இருக்கும். சந்தா காலத்தில் பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு 4,677 ரூபாயாக இருக்கும் (ரூபாய் நான்காயிரத்து அறுநூற்று எழுபத்தேழு மட்டும்) என ரிசர்வ் வங்கி 2020 ஜூன் 05 தேதியிட்ட செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இணையம் வாயிலாக விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கும், டிஜிட்டல் முறை மூலம் கட்டணம் செலுத்துவோருக்கும் வெளியீட்டு விலையிலிருந்து ஒரு கிராமுக்கு 50 ரூபாய் (ரூபாய் ஐம்பது மட்டும்) தள்ளுபடி செய்ய இந்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து முடிவு செய்துள்ளது. அத்தகைய முதலீட்டாளர்களுக்கு தங்க பத்திரத்தின் விலை ஒரு கிராம் தங்கத்திற்கு 4,627 ரூபாய் ஆக இருக்கும் (ரூபாய் நான்காயிரத்து அறுநூற்று இருபத்தி ஏழு).

****



(Release ID: 1629878) Visitor Counter : 203


Read this release in: English , Urdu , Hindi