பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

இரண்டாவது முறையாக மோடி அரசு பதவியேற்ற ஓராண்டில் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மேற்கொண்ட சாதனைகள் குறித்த கையேடு மற்றும் அதன் மின்னணுப் பதிப்பை வெளியிட்டார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

Posted On: 05 JUN 2020 7:59PM by PIB Chennai

பணியாளர் மற்றும் பயிற்சித்துறையின் ஓராண்டு சாதனைகள் குறித்தக் கையேடு மற்றும் அதன் மின்னணு பதிப்பை காணொளிக் காட்சி மூலம் மத்திய வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலக விவகாரங்கள், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளின் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் உரையாற்றிய இணை அமைச்சர், ஓராண்டில் துறை மேற்கொண்ட சாதனைகளில் சில அம்சங்களைக் குறிப்பிட்டார். அவற்றைக் கீழே காணலாம்:

  1. AARAMBH – குடிமைப்பணிகள் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அடிப்படை மேம்பாட்டு வகுப்பு நடத்தப்பட்டது. கேவாடியாவில் உள்ள ஒற்றுமையின் சிலை அருகே இந்த அதிகாரிகள் மத்தியில் 31.10.2019-இல் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார்.
  2. ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சி என்ற பெயரில் அரசு ஊழியர்களுக்குப் புதிய பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை விதிகள் அடிப்படையிலான பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், பணிகள் அடிப்படையில் பயிற்சி வழங்குவதே இதன் நோக்கம்.
  3. கோவிட்-19 வைரஸை எதிர்கொள்ளப் போராடும் முன்களப் பணியாளர்களின் பயிற்சித் தேவையை நிறைவேற்றும் வகையில், அவர்களுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை கோவிட்-19 தொடர்பான ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சிக்கு 10,52,410 பயன்பாட்டாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் இதுவரை 20 லட்சத்துக்கும் மேலான பாடப் பிரிவுகளை பயன்படுத்தியுள்ளனர்.
  4. லோக்பால் அமைப்புக்கான புதிய அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்தது. லோக்பால் (புகார்) விதிகள் உருவாக்கப்பட்டது. நிதி, கணக்கு மற்றும் சொத்துக்களை அறிவிப்பதற்கான விதிகள் தயாரிப்புப்பணி முக்கிய கட்டத்தில் உள்ளது.
  5. அரசுப் பணியாளர்கள் தேர்வில் அடிப்படை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், நமது குடிமக்கள், குறிப்பாக ஏழைகள் மற்றும் வறிய பிரிவில் இருப்பவர்கள், அரசுப் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நெருக்கடியான வழிமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தேசிய பணியாளர் தேர்வு முகமையை அமைக்கும் திட்டம், முக்கிய கட்டத்தில் உள்ளது. அரசிதழ் பதிவு பெறாத பதவிகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்ய ஆன்லைன் முறையில் பொதுவான தகுதித் தேர்வை தேசிய தேர்வு பணியாளர் முகமை நடத்தும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். அரசுப் பணியில் சேர விரும்புவோர் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளை இது குறைக்கும்.
  6. மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் கிளைகள், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் அமைக்கப்பட்டன. ஜம்மு-வில் உள்ள தீர்ப்பாயத்தின் திறப்பு விழா, காணொளிக் காட்சி மூலம் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.


(Release ID: 1629872) Visitor Counter : 195