அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் தொழில்நுட்ப குறுக்கீடுகள் மூலம் கோவிட் 19 பாதிப்புகளை எஸ்.சி., எஸ்.டி. மக்கள் தாங்கும் திறனை உருவாக்கியுள்ள அறிவியல் தொழில்நுட்பத் துறை.
Posted On:
05 JUN 2020 4:06PM by PIB Chennai
கோவிட்-19 பாதிப்பு காரணமாக நாடு தழுவிய அளவில் முடக்கநிலை அமல் செய்ததால் வாழ்வாதார அளவிலும், பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தினரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பல்வேறு அறிவுசார் நிறுவனங்கள், அறிவியல் தொழில்நுட்பம் அடிப்படையிலான தன்னார்வ அமைப்புகளுக்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவான சமத்துவ அதிகாரமளிப்பு மற்றும் வளர்ச்சிக்கான அறிவியல் பிரிவு (SEED) மானிய உதவி அளிக்கிறது.
தேசிய அளவிலான முடக்கநிலை அமல் காரணமாக மக்களின் நடமாட்டம் முடக்கப்பட்டு, மனிதத் தொடர்புகள் முடக்கப்பட்டன. இதனால் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அடிமட்ட அளவில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய பிரத்யேகமான சவால் ஏற்படும் அளவுக்கு சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. சுகாதாரம், சமரசம் செய்து கொண்ட உணவுப் பழக்கங்கள், வாங்கும் சக்தி குறைந்தது, குறைவான கல்வி நிலை தொடர்பான ஏற்கெனவே இருந்த சவால்களுடன், சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் குறித்த தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இந்தச் சமூகத்தினருக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவிகள் சென்று சேருவதில் தடைகள் ஏற்பட்டன.
SEED பிரிவின் மூலம் அறிவுசார் நிறுவனங்கள், அறிவியல் தொழில்நுட்பம் அடிப்படையிலான தன்னார்வ அமைப்புகளுக்கு உதவி அளிப்பதன் மூலம், தொடர்புடைய பல்வேறு துறையினரிடம் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி, குறிப்பாக அடிப்படை அளவில் தொடர்பு உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறிவுசார் நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சமூகத்தினர் மத்தியில் பிரச்சினைகளைச் சமாளிக்க, மீட்டுருவாக்கம் செய்ய, தாங்கு திறனை உருவாக்கும் செயல் திட்டங்களை அமல் படுத்துவதற்கு அவை நெருக்கமான ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
மத்திய அரசின் பி.எஸ்.ஏ. அலுவலகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி முகக் கவச உறை தயாரிக்கும் திறன்கள் உருவாக்கம், உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்களின்படி கை கிருமிநாசினிகள் தயாரிக்கும் திறன்கள் உருவாக்கம், எப்.டி.எம். மூலம் 3D அச்சிட்ட முகக் கவசம் உருவாக்கும் திறன்களை வெளிக் கொண்டு வர இந்த முயற்சி உதவியுள்ளது.
(Release ID: 1629734)
Visitor Counter : 240