புவி அறிவியல் அமைச்சகம்

தீவிரப் புயலாக இருந்த ‘நிசர்கா’ மகாராஷ்டிரா கடலோர பகுதியில் புயலாக பலவீனமடைந்தது.


தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்/ மண்டல சிறப்பு வானிலை மையம்/ இந்திய வானிலைத் துறையின் புயல் எச்சரிக்கைப் பிரிவு ஆகியன பின்வரும் தகவல்களை அளித்துள்ளன:

Posted On: 03 JUN 2020 8:56PM by PIB Chennai

தீவிரமான புயல் நிசர்கா, கடந்த 6 மணி நேரத்தில் மகாராஷ்டிரா கடலோரப் பகுதியின் மீது வடகிழக்கு முகமாக 23 கிமீ வேகத்தில் நகர்ந்து புயலாக பலவீனமடைந்தது. இது, 2020, ஜூன் 3 ஆம் தேதி 1730 மணிக்கு, மகாராஷ்டிராவின் உட்பகுதி மீது அட்ச ரேகை 19.0° வடக்கு, தீர்க்க ரேகை 73.7° கிழக்காக மும்பையின் (மகாராஷ்டிரா) கிழக்கு பகுதியில் இருந்து 90 கிமீ தொலைவிலும், புனேவின் (மகாராஷ்டிரா) வடக்கு-வடகிழக்காக 50 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. அடுத்த 3 மணி நேரத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக பலவீனமடைய வாய்ப்புள்ளது.

 

( iv) மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மீனவர்கள் கிழக்குமத்திய மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதியிலும், கர்நாடகாவிற்கு வெளியிலும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.



(Release ID: 1629407) Visitor Counter : 82


Read this release in: English , Urdu