புவி அறிவியல் அமைச்சகம்

மிகத்தீவிரமான புயல் நிசர்கா, மகாராஷ்டிராவில் கரை கடந்தது - வட மகாராஷ்டிரா, அதை ஒட்டியுள்ள தெற்கு குஜராத் கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை- சிவப்பு வண்ண எச்சரிக்கை

Posted On: 03 JUN 2020 4:29PM by PIB Chennai

கிழக்கு மத்திய அரபிக் கடலில் தீவிரப் புயல் வடகிழக்குமுகமாக நகர்ந்து கடந்த 6 மணி நேரங்களில் மணிக்கு 23 கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து மஹாராஷ்டிரா கரையைக் கடந்தது. மணிக்கு100- 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிகபட்சக் காற்று வீசியது. இன்று 3 ஜூன், 2020 இந்திய நேரப்படி 12.30முதல் 14.30 மணியிடையே மஹாராஷ்டிரா கரையைக் கடந்தது. 18.5° வடக்கு அட்ச ரேகை, 73.2°கிழக்கு தீர்க்க ரேகை மகாராஷ்டிராவில் அலிபாகுக்கு கிழக்கு-தென்கிழக்கு பகுதிருகே, மும்பைக்கு (மகாராஷ்டிரா) 75 கிலோமீட்டர் தென்கிழக்கே, புனேவுக்கு (மகாராஷ்டிரா) மேற்கே 65 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது அடுத்த 6 மணி நேரங்களில் வடகிழக்குமுகமாக நகர்ந்து புயலாக வலுவிழக்கக்கூடும்.

மும்பையில் (மகாராஷ்டிரா) உள்ள டாப்ளர் வானிலை ராடார்கள் மூலமாக இது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது



(Release ID: 1629147) Visitor Counter : 173


Read this release in: English , Punjabi