மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மேல்நிலை வகுப்புகளுக்கான (வகுப்பு XI மற்றும் XII) மாற்றுக் கல்வியாண்டு காலஅட்டவணையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் புதுதில்லியில் இன்று வெளியிட்டார்

Posted On: 03 JUN 2020 1:45PM by PIB Chennai

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் “நிஷாங்க்” இன்று புதுதில்லியில் மேல்நிலை வகுப்புகளுக்கான (வகுப்பு XI மற்றும் XII)   மாற்றுக் கல்வியாண்டு காலஅட்டவணையை வெளியிட்டார்.  கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக மாணவர்கள் வீட்டிலேயே இருக்கும் சூழலில் அவர்களின் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிடுவதற்கு உதவும் வகையில் இந்தக் காலஅட்டவணையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் - என்சிஇஆர்டி உருவாக்கியுள்ளது.  மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட இந்த அட்டவணையானது உதவும்.

இந்தக் காலஅட்டவணையை வெளியிட்டு உரையாற்றிய போது மனிதவள மேம்பாட்டு அமைச்சர் வேடிக்கையாகவும் ஆர்வத்துடனும் கல்வி கற்பதற்காகக் கிடைக்கக்கூடிய பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சமூக ஊடக உபகரணங்களை ஆசிரியர்கள் எப்படிப் பயன்படுத்துவது என்ற வழிகாட்டுதல்களைத் தரும் என்றும் இவற்றை வீட்டில் இருந்தபடியே மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.  எனினும், பல்வேறுபட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் பிளாட்ஃபார்ம்களை – அதாவது மொபைல், வானொலி, தொலைக்காட்சி, குறுஞ்செய்தி மற்றும் பல்வேறு சமூக ஊடகங்கள் ஆகியவற்றை மாணவர்கள் அணுகிப் பயன்படுவத்துவது என்பது ஒரே நிலையில் இல்லாமல் வேறுபட்டு இருக்கும் என்ற யதார்த்த நிலையையும் இந்த அட்டவணையானது கவனத்தில் கொண்டுள்ளது. 

இணைய வசதி இல்லாத அல்லது வாட்ஸ்அப், முகநூல், கூகுள் முதலான சமூக ஊடக உபகரணங்களைப் பயன்படுத்த முடியாத மாணவர்கள் மொபைல் போன் மூலம் குறுஞ்செய்தி சேவை அல்லது குரல்வழி அழைப்பு மூலம் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் எவ்வாறு வழிகாட்டுவது என்பது குறித்து இந்தக் காலஅட்டவணையானது ஆசிரியர்களுக்கு வழிகாட்டுகிறது என திரு பொக்ரியால் குறிப்பிட்டார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் (சிறப்புத்தேவை உள்ள குழந்தைகள்) உள்ளிட்ட அனைத்து குழந்தைகளின் தேவையையும் இந்தக் காலஅட்டவணை பூர்த்திசெய்யும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  அதாவது ஒலிவடிவ நூல்கள், வானொலி நிகழ்ச்சிகள், வீடியோ நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கான இணைப்புகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

பாடத்திட்டம் அல்லது பாடபுத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மையக்கருத்து / அத்தியாயத்தின் அடிப்படையில் ஆர்வமூட்டும் மற்றும் சவாலான நடவடிக்கைகளை உள்ளடக்கிய வாராந்திர செயல்திட்டத்தின் அடிப்படையில் காலஅட்டவணை உள்ளது என பொக்ரியால் தெரிவித்தார்.  இது மையக்கருத்துகளை கற்றல் விளைவுகளோடு வரைபடம் மூலம் இணைக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.  கற்றல் விளைவுகளோடு மையக்கருத்துகளை வரைபடம் மூலம் இணைப்பது என்பது குழந்தையில் கற்றல் செயலில் ஏற்படும் முன்னேற்றத்தை ஆசிரியர் / பெற்றோர் மதிப்பீடு செய்ய உதவியாக இருக்கும்.  மேலும் கற்றலைப் பாடபுத்தகத்துக்கு அப்பாலும் எடுத்துச் செல்ல உதவும்.  காலஅட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் கற்றல் விளைவுகள் மீது கவனம் செலுத்துவதோடு இந்த விளைவுகளை மாணவர்கள் தங்களது மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் தாங்கள் பயன்படுத்தும் பாடபுத்தகங்கள் உள்ளிட்ட எந்த ஒரு மூலவளத்தைக் கொண்டும் அடைய முடியும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

காலஅட்டவணையானது கலைகள், கல்வி. உடற்பயிற்சி, யோகா போன்ற அனுபவக் கற்றல் செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது என்று திரு.பொக்ரியால் எடுத்துக் கூறினார். இந்தக் காலஅட்டவணை வகுப்பு வாரியான மற்றும் பாடம் வாரியான செயல்பாடுகளை அட்டவணை வடிவத்தில் தருவதோடு இந்தி, ஆங்கிலம். உருது மற்றும் சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளைப் பாடங்களாகக் கொண்டு அது தொடர்பான செயல்பாடுகளையும் உள்ளடக்கி இருக்கிறது.  ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைப்பதற்கான செயல்உத்திகளை உள்ளடக்கும் வகையிலும் இந்தக் காலஅட்டவணை உள்ளது.  இ-பாடசாலை, என்ரோயர் (NROER) மற்றும் தீக்‌ஷா போன்ற இந்திய அரசின் போர்ட்டல்களில் கிடைக்கக் கூடிய இ-உள்ளடக்கங்களை அத்தியாயம் வாரியான இணைப்புடன் காலஅட்டவணை தருகிறது.

மேல்நிலைக் கல்விக்கான மாற்று கல்வியாண்டு காலஅட்டவணைக்கு இங்கு கிளிக் செய்யவும்.

ஆங்கிலம்:

Click here for Alternative Academic calendar for Higher Secondary English : http://pibcms.nic.in/WriteReadData/userfiles/AAC_HigherSecondary_eng.pdf

இந்தி:

Click here for Alternative Academic calendar for Higher Secondary Hindi : http://pibcms.nic.in/WriteReadData/userfiles/AAC_HigherSecondary_Hin.pdf

 


(Release ID: 1629024) Visitor Counter : 272