ஜல்சக்தி அமைச்சகம்

மார்ச் 2023-க்குகள் அனைத்து ஊரக குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க அருணாச்சலப்பிரதேசம் திட்டம்

Posted On: 02 JUN 2020 1:13PM by PIB Chennai

அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கு  100 சதவீத குடிநீர் இணைப்பு வழங்கும், வருடாந்திர செயல் திட்டத்திற்கு  ஜல்சக்தி  அமைச்சகத்தின் தேசிய ஜல் ஜீவன் திட்டம் ஒப்புதல் வழங்கியது.  2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்க  அருணாச்சலப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. 2020-21-ஆம் ஆண்டில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அருணாச்சலப் பிரதேச அரசுக்கு மத்திய அரசு ரூ.225 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. செயல்பாட்டு சாதனை அடிப்படையில் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்படுகிறது.  அதாவது வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் அதற்கு நிகரான நிதிநிலை முன்னேற்றம் அடிப்படையில் இது அளிக்கப்படுகிறது.    மொத்தம் உள்ள 2.18 லட்சம் கிராம வீடுகளில், 2020-21ஆம் ஆண்டில், 77,000 குடிநீர் இணைப்புகள் வழங்க அருணாச்சலப்பிரதேசம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டமிடலில், உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய மாவட்டத்தில் உள்ள வீடுகள்,  தரம் குறைவான குடியிருப்புகள் மற்றும் சன்சாத் ஆதர்ஷ் யோஜனா கிராமங்கள் மற்றும் இதரவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில்  அழுத்தம் கொடுக்கப்படுகிறது.


(Release ID: 1628722) Visitor Counter : 282