புவி அறிவியல் அமைச்சகம்

2020 தென்மேற்குப் பருவமழைக் கால மழை குறித்த நீண்டகால வானிலை முன்னறிவிப்பு.

प्रविष्टि तिथि: 01 JUN 2020 3:31PM by PIB Chennai

2020 தென்மேற்குப் பருவமழைக் கால மழை நிலவரம் குறித்த நீண்டகால முன்னெச்சரிக்கை இரண்டாவது அறிவிப்பை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்று வெளியிட்டுள்ளது. புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம். ராஜீவன், இந்திய வானிலை ஆராய்ச்சி மைய தலைமை இயக்குநர் டாக்டர் எம். மொஹபத்ரா ஆகியோர் செய்தியாளர் கூட்டத்தில், தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த அண்மைத் தகவல்களுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டனர். ஒட்டுமொத்தமாக, தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு இயல்பாக அல்லது இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று டாக்டர் ராஜீவன் தெரிவித்தார். அனைத்து சூழ்நிலைகளும் பொருத்தமாக இருந்ததால் தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்கி இருப்பதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

 


(रिलीज़ आईडी: 1628408) आगंतुक पटल : 281
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Punjabi , English