நித்தி ஆயோக்

வேளாண் சூழலியலும், இயற்கை விவசாயமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும்

Posted On: 01 JUN 2020 2:49PM by PIB Chennai

இந்தியாவில் இயற்கை வேளாண்மை அணுகுமுறைகளையும், வேளாண் சூழலையும் கணிசமாக ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்கு, நிதிஆயோக் ஏற்பாடு செய்திருந்த மாநாடு ஒன்றில் சர்வதேச நிபுணர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். 29 மே 2020 அன்று நடந்த இந்த மாநாட்டில் தேசிய, சர்வதேச மூத்த நிபுணர்களும், கொள்கை வகுப்பாளர்களும் பங்கேற்றனர்.  நிபுணர்களிடையே உரையாற்றிய மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், மாட்டுச்சாணம், மாட்டின் சிறுநீர், பயோமாஸ்,ழைக்கூளம் காற்றோட்டமான மண் போன்றவற்றை கொண்ட உள்நாட்டு முறைகளை அடிப்படையாகக் கொண்டது நமது இயற்கை விவசாயம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு, இயற்கை விவசாயம் உட்பட இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வரப்படும். இதில் பன்னிரண்டு லட்சம் ஹெக்டேர் நிலம் பாரதிய ப்ராக்ரித்திக் க்ரிஷி மேம்பாட்டு திட்டத்தின் BPKP [Bharatiya Prakritik Krishi Paddhati Programme] கீழ் உள்ளதுஎன்றார்.

 

சிறு குறு விவசாயிகள் இடையே இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக 2015ஆம் ஆண்டில் பரம்பராகட் கிரிஷி விகாஸ் திட்டம் Paramparagat Krishi Vikas Yojana தொடங்கப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை ஏழு லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் எட்டு லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறினார் ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, ஹிமாச்சல் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்கள் பெரிய அளவில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார் இத்திட்டத்தின் கீழ் ஆந்திரப்பிரதேசம் மட்டும் 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பை இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தற்போதைய தேவை, நாட்டிற்கு உணவளிப்பதையும், உணவை ஊட்டச்சத்து மிகுந்ததாக்குவதையும் புறக்கணித்து விடாமல், இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாத உணவுப்பொருள்ளை உற்பத்தி செய்வதேயாகும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

 (Release ID: 1628381) Visitor Counter : 394