புவி அறிவியல் அமைச்சகம்

தென்மேற்குப் பருவமழை மேலும் முன்னேறுவதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகி வருகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 30 MAY 2020 9:18PM by PIB Chennai

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்கணிப்பு மையம்/புயல் எச்சரிக்கைப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்கள் (மாலைநேர கணிப்பு)

 (1) ஓமனின் தெற்குக் கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய ஏமன் பகுதியில் உருவான காற்றழுத்தம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. மே 30, 2020, இன்று மாலை 5-30 மணி நிலவரப்படி, 17.0°N அட்சரேகை மற்றும் 53.9°E தீர்க்கரேகையில், சலாலா-விலிருந்து (ஓமன்) 20 கிலோமீட்டர் மேற்கிலும், அல்-கேய்தா-விலிருந்து (ஏமன்) கிழக்கு-வடகிழக்கில் 200 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இது தெற்கு ஓமன் மற்றும் ஏமன் கடலோரப் பகுதியையொட்டி, குறைந்த வேகத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

(2) தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில், அடுத்த 36 மணிநேரத்தில் மற்றொரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, 48 மணிநேரத்தில் காற்றழுத்தமாக கிழக்கு மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருக்கும். அதன்பிறகு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த  4 முதல் 5 நாட்களில் குஜராத் மற்றும் அதனையொட்டிய வடக்கு மகாராஷ்டிரா கடலோரப் பகுதியை நோக்கி வடக்கு-வடமேற்கு திசையில் இது நகருவதற்கு வாய்ப்பு உள்ளது.

தென்மேற்குப் பருவமழையானது, அடுத்த 24 மணிநேரத்தில் தெற்கு அரபிக்கடல், மாலத்தீவு, கன்னியாகுமரி பகுதி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் ஆகியவற்றில் மேலும் சில பகுதிகளில் முன்னேறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் ஜூன் 1, 2020-இல் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது.


(வெளியீட்டு அடையாள எண்: 1628150) வருகையாளர் எண்ணிக்கை : 193
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali