அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நீடித்த நிலையான எரிசக்திக்கு பொருள் அறிவியியல் மற்றும் மின்வேதியியல் இணைப்பு பற்றி ஸ்ரீநகர் என்ஐடி பேராசிரியர் ஆராய்ச்சி

Posted On: 30 MAY 2020 1:43PM by PIB Chennai

ஸ்ரீநகர் தேசியத் தொழில்நுட்ப மையத்தின் (என்ஐடி) போராசிரியர் டாக்டர். மாலிக்அப்துல்வாஹித், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பமையம் வழங்கும் ‘இன்ஸ்பயர் ஆசிரியர்’ விருதைப் பெற்றவர். இவர் எரிசக்தி ஆராய்ச்சியில், பொருள் அறிவியல் மற்றும் மின்வேதியியலை இணைத்து, நீடித்த நிலையான மற்றும் மலிவான எரிசக்தியை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இவரது கவனம் முக்கியமாக மின்முனைகள் மற்றும் எலக்ட்ரோலைட் பொருள் மின்வேதியியல் ஆகியவற்றில் உள்ளது.

சோடியம்அயன்(Na-ion) மின்கலத்துக்கான மின்முனை மேம்பாடு தான் டாக்டர்.மாலிக்கின் தற்போதைய ஆராய்ச்சியின் முக்கிய கூறுகள். இதை தற்போதைய லித்தியம் அயன் (Li-ion) தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது 20 சதவீதம் செலவு குறைப்பை வழங்குகிறது. இவர் 2 அம்சங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதாவது செலவு குறைப்பு மற்றும் திறன் மேம்பாடு. செலவு குறைப்புக்கு, அவர் தற்போது கார்பன் அடிப்படையிலான அனோடுகள் மற்றும் ஆர்கானிக் கேத்தோடுகளின் இணைப்பை நிலைப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார். திறன்மேம்பாட்டுக்கு, புதிய ‘கேத்தோடு’ (Cathode) வேதியல்களை அவர் ஆய்வு செய்து வருகிறார்.

அவரது சமீபத்திய இரண்டு ஆய்வுத் திட்டங்கள், அதிக திறனடைய கேத்தோடு உருவாக்கம் மற்றும் சல்பேட்-பாஸ்பேட் இணைப்பு கேத்தோடு பற்றியது. இதே போல அதிக சோடிய படிவுத்திறனுடன் கூடிய சோடியம் உலோக அனோடு ஹோஸ்ட்கள் உருவாக்கப்படுகின்றன. சோடியம் அயன் மின்கல ஆராய்ச்சியில், இந்த ஆய்வுத்திட்டங்கள் ஒரு புதிய கோணத்திலானவை ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, டாக்டர்.மாலிக் அப்துல் வாஹித்தை malikwahid15[at]gmail[dot]com

என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.



(Release ID: 1627905) Visitor Counter : 143


Read this release in: English , Hindi , Punjabi