புவி அறிவியல் அமைச்சகம்

தெற்கு ஓமன் கடலோரம் மற்றும் அதை ஒட்டியுள்ள ஏமன் பகுதியில் காற்றழுத்தம்.

प्रविष्टि तिथि: 29 MAY 2020 8:09PM by PIB Chennai

இந்திய வானிலை மையத்தின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் வெளிட்டுள்ள தகவல்:

தெற்கு ஓமன் மற்றும் கிழக்கு ஏமனுக்கு அப்பால் மேற்கு மத்திய அரபிக்கடல்பகுதியில் உருவாகிய குறைந்த காற்றழுத்தம், தெற்கு ஓமன் கடலோரம் மற்றும் அதையொட்டியுள்ள ஏமன்பகுதியில் காற்றழுத்தமாக உருவாகி மே29, 2020 மதியம் 2.30 மணி நிலவரப்படி சலாலாவுக்கு (ஓமன்) வடக்கே 50 கி.மீ தொலைவிலும், அல்கேதாவுக்கு வடகிழக்கே(ஏமன்) 240 கி.மீதொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையாக மாறும் எனத் தெரிகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கியும், அதன் பின்பு மேற்கு மற்றும் தென்மேற்கு நோக்கியும் நகரும் எனத் தெரிகிறது.

(iv) மீனவர்களுக்கானஎச்சரிக்கை:

மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்கு மேற்கு மத்திய அரபிக்கடல் மற்றும் தெற்கு ஓமன்-ஏமன் கடலோரப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிக்கு மேல், இரண்டாவது குறைந்த காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மீனவர்கள் 31ஆம் தேதி முதல் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிக்குச் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.


(रिलीज़ आईडी: 1627890) आगंतुक पटल : 264
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी