புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

ஆண்டு தேசிய வருமானம் 2019- 2020 , மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019-2020 நான்காம் காலாண்டு (Q4) உத்தேச மதிப்பீடுகள்,

Posted On: 29 MAY 2020 5:45PM by PIB Chennai

ஆண்டு தேசிய வருமானம் 2019 - 2020 , மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2019 -2020 நான்காம் காலாண்டு (Q4) உத்தேச மதிப்பீடுகள், தேசிய புள்ளிவிவரம் மற்றும் திட்ட  நடைமுறைப்படுத்துதல் அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் 2019 - 2020 நிதியாண்டிற்கான ஆண்டு வருமானத்தின் உத்தேச மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. நிலையான 2011 - 2012 மற்றும் தற்போதைய விலைமதிப்பின் அடிப்படையில் 2019 - 2020ஆம் ஆண்டில் நான்காம் காலாண்டு (ஜனவரி- மார்ச்) மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான காலாண்டு மதிப்பீடுகள் நிலையான 2011 - 2012 மற்றும் தற்போதைய விலைமதிப்பின் படியிலான காலாண்டு மதிப்பீடுகள், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் செலவினங்களின் மதிப்பீடுகளுடன் வெளியிடப்பட்டுள்ளது. 2019 - 2020ஆம் ஆண்டுக்கான Q-1, Q-2 – Q-3 காலாண்டுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வளர்ச்சி விகிதங்கள் தேசியக் கணக்குகள் கொள்கையின்படி திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

 

  1. கோவிட்-19 பெருந்தொற்று நோயைக் கருத்தில் கொண்டும், அதையடுத்து மார்ச் 2020 முதல் தேசிய அளவிலான பொதுமுடக்க நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதையடுத்தும் பொருளாதார அமைப்புகளிலிருந்து கிடைக்கப்பெறும் புள்ளிவிவரங்கள் தரவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

  1. 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய வருமானத்திற்கான இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடு 28 பிப்ரவரி 2020 அன்று வெளியிடப்பட்டது இந்த மதிப்பீடுகள், வேளாண் உற்பத்தி, தொழில் உற்பத்திக்குறியீடு, ரயில்வே, ரயில்வே தவிர இதரப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வங்கித்துறை, காப்பீடு, அரசு வரவு - செலவினம் ஆகிய முக்கிய பிரிவுகளில் செயல் திறன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ளன. 1 ஜூலை 2017 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் வரிக் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட இதர மாற்றங்கள் காரணமாக ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இருப்பதற்காக பயன்படுத்தப்படும் மொத்த வரிவருவாய், ஜிஎஸ்டி அல்லாத வருவாய் மற்றும் ஜிஎஸ்டி வருவாய் என்ற இரண்டையும் உள்ளடக்கியதாக உள்ளது. நிலையான விலைமதிப்புள்ள பொருள்களுக்கான வரியைப் பெறுவதில் வால்யூம் எக்ஸ்ட்ராபொலேஷன் என்ற முறைப்படி எண்ணிக்கையில் வளர்ச்சியைப் பொறுத்து வரி விதிக்கப்படும். பொருட்களுக்கும், சேவைகளுக்கும் ஆன வரி கணக்கிடப்பட்டு, மொத்த வரி அளவு கணக்கிடப்படுகிறது. இரண்டாவது முன் கூட்டிய மதிப்பீடுகளின்படி ஏப்ரல் முதல் டிசம்பர் 2019 வரையான கார்ப்பரேட் பிரிவு செயல்திறன் பற்றிய முந்தைய முடிவுகள் சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. டெபாசிட்டுகள், கடன்கள், ரயில்வே துறையில் பயணிகள் மற்றும் சரக்கு வருவாய், விமானப்பயணிகள் போக்குவரத்து, விமான நிலையங்களில் கையாளப்பட்ட சரக்குகள், முக்கிய துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குகள், வர்த்தக வாகனங்களின் விற்பனை ஆகியவை குறித்த நிதியாண்டின் முதல் 9/10 மாதங்களுக்கான இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகள் மார்ச் 2020 வரை கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

 

  1. உண்மையான ஜிடிபி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி (2011 - 2012) நிலையான விலை மதிப்பிலான 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான உண்மையான ஜிடிபி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி 145.66 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக 2018 - 2019 ஆம் ஆண்டில் முதலாவது திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டின்படி 139.81 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 31 ஜனவரி 2020 அன்று வெளியிடப்பட்ட படி இது மதிப்பிடப்பட்டிருந்தது. 2019 - 2020 ஆம் ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 4.2 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2018 - 2019 ஆம் ஆண்டில் இது 6.1 சதவீதமாக இருந்தது.

 

  1. தற்போதைய விலைமதிப்பின் அடிப்படையிலான 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான ஜிடிபி 203.40 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2018 - 2019 ஆம் ஆண்டில் இது முதலாவது திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகளின்படி 189.71 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2018 - 2019 ஆம் ஆண்டுடன் 11 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி விகிதம்  7.2 சதவீதமாக இருந்தது. .

 

  1. தனிநபர் வருமானம் (2011 - 2012 விலை மதிப்பில்) 2019 - 2020ஆம் ஆண்டு ஆண்டின் போது 94,954 ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2018- 19இல் இது 92,085 ரூபாயாக இருந்தது. 2019 - 2020ஆம் ஆண்டில் இது 3.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. சென்ற ஆண்டில் இது 4.8 சதவீதமாக இருந்தது. தற்போதைய விலைமதிப்பில் அடிப்படையில் தனிநபர் வருமானம் 2019 - 2020 காலத்தில் 134226 ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2018 - 2019 காலத்தில் 126521 ரூபாயுடன் ஒப்பிடுகையில் 6.1 சதவீதம் அதிகமாகும்.

 

  1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (நிலையான விலை மதிப்பின் அடிப்படையில் 2011- 12 ) 2019 - 2020 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், 38.0 4 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2018 - 2019 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 36.90 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததுடன் ஒப்பிடுகையில், இது 3.1 சதவிகிதம் அதிகமாகும்.

 

மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1627671



(Release ID: 1627748) Visitor Counter : 675


Read this release in: Telugu , English , Hindi