அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உணவில் புற்றுநோய் மற்றும் பிறழ்வுக் கலவைகளைக் கண்டறிவதற்கான மின்வேதியியல் உணர்வு தளத்தை நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் (IASST) உருவாக்கியுள்ளது.
Posted On:
22 MAY 2020 2:47PM by PIB Chennai
குவஹாத்தியில் உள்ள நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் (Institute of Advanced Study in Science and Technology - IASST) உணவில் புற்றுநோய் மற்றும் பிறழ்வுக் கலவைகளைக் கண்டறிவதற்கான மின் வேதியியல் உணர்வுத் தளத்தை உருவாக்கியுள்ளது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பன்றி இறைச்சி, சில வகை பாலாடைக்கட்டிகள், குறைந்த கொழுப்புள்ள பால் போன்ற உணவுப் பொருள்களில் சில நேரங்களில் இருக்கக்கூடிய நைட்ரோசாடிமிதைலாமின் (என்டிஎம்ஏ), நைட்ரோசோடிஎத்தனாலாமின் (என்டிஇஏ) ஆகிய கலவைகளைக் கண்டறியக்கூடிய இதனை, உயிரணுவில் கார்பன் மீநுண் பொருள்களை அசையாமல் நிறுத்தி, மாற்றியமைக்கப்பட்ட மின்முனையம் வழியாக உருவாக்குகின்றனர்.
நகர்ப்புற இந்தியர்களின் மாறி வரும் உணவுப் பழக்கங்களால், நைட்ரோசமின் குடும்பத்தைச் சேர்ந்த, உடலுக்கு ஊறு விளைவிக்கும் வேதிப்பொருள்கள் உடலில் சேருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்த வேதிப்பொருள்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பன்றி இறைச்சி, சில வகைப் பாலாடைக்கட்டிகள், குறைந்த கொழுப்பு கொண்ட உலர் பால், மீன் ஆகியவற்றில் இருக்கக்கூடும். நைட்ரோசாடிமிதைலாமின், நைட்ரோசோடிஎத்தனாலாமின் ஆகிய இந்த வேதிப்பொருள்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவற்றில் இருக்கும். இவை நமது மரபணுவின் வேதியல் கலவையை மாற்றக்கூடியவையாகும். எனவே இவற்றைக் கண்டறிவிதற்கான உத்திகளைக் கண்டுபிடிப்பது முக்கியமாகும்.
(Release ID: 1626127)
Visitor Counter : 220