புவி அறிவியல் அமைச்சகம்

உம்.பன் அதி தீவிர புயல் வங்கதேசத்தின் மீது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மையம் கொண்டுள்ளது (இரவு 8.30 மணி)

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAY 2020 9:00PM by PIB Chennai

உம்.பன் அதி தீவிர புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வழுவிழந்து மே 21, 2020 மாலை 5.30 மணி நிலவரப்படி வங்கதேசத்தின் மீது மையம் கொண்டுள்ளது. இது வடக்கு-வடகிழக்கு கொல்கத்தாவுக்கு 350 கி.மீ தொலைவிலும், தெற்கு மற்றும் தென்மேற்கு துப்ரிக்கு 70 கி.மீ தொலைவிலும், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ராங்பூருக்கு (வங்கதேசம்) 50 கி.மீ தொலைவிலும் உள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து தாழ்வு நிலையாக வலுவிழக்கும் எனத் தெரிகிறது.


(வெளியீட்டு அடையாள எண்: 1626061) வருகையாளர் எண்ணிக்கை : 218
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Telugu