புவி அறிவியல் அமைச்சகம்

மேற்கு மத்திய வங்கக் கடலில் கடும் சூறாவளி புயல் உம்-பன்: பிற்பகல் 1.20 மணி நிலவரம் – மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை – ரெட் செய்தி

प्रविष्टि तिथि: 20 MAY 2020 2:00PM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் (பிற்பகல் 1.20 மணிக்கு) விடுத்துள்ள புயல் எச்சரிக்கை:

வங்கக் கடலின் வடமேற்கு பகுதியில் மையம் கொண்டுள்ள கடும் சூறாவளி புயலான உம்-பன், வடக்கு – வடகிழக்கு திசையில் மணிக்கு 29 கிலோ மீட்டர் வேகத்தில், கடந்த 6 மணி நேரமாக நகர்ந்து வந்துள்ளது. இந்தப் புயல் பாரதீபுக்கு (ஒடிசா) கிழக்கு – வடகிழக்கு திசையில் 140 கிலோ மீட்டர் தொலைவிலும், திகாவுக்கு (மேற்கு வங்கம்) வடக்கு – வடகிழக்கு திசையில் 125 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுக்கு தெற்கே 125 கிலோ மீட்டர் தொலைவிலும், கெபுபராவுக்கு (பங்களாதேஷ்) தென் மேற்கே 125 கிலோ மீட்டர் தொலைவிலும் இன்று காலை 11.30 மணியளவில் மையம் கொண்டிருந்தது. இந்த புயல் மேற்கு வங்காளம் – பங்களாதேஷ் கடற்கரையோரப் பகுதிகளுக்கு குறுக்கே மற்றும் வடக்கு – வடகிழக்கு நோக்கி இன்று பிற்பகல் அல்லது மாலையில் சுந்தர்பன்ஸ் அருகே, மணிக்கு 155 – 185 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


(रिलीज़ आईडी: 1625679) आगंतुक पटल : 223
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Manipuri , English , Punjabi , Urdu