புவி அறிவியல் அமைச்சகம்
மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் கடும் சூறாவளிப் புயல் உம்-பன்: மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரை பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை: ஆரஞ்சு தகவல் (நேற்று இரவு 20.30 மணி)
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2020 9:39PM by PIB Chennai
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சமீபத்தில் (நேற்று இரவு 20.30 மணி) விடுத்துள்ள புயல் எச்சரிக்கை: மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் மையம் கொண்டள்ள உம்-பன் கடும் சூறாவளிப் புயலானது, கடந்த 6 மணி நேரத்தில், வடக்கு திசையில், மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காள விரிகுடாவுக்கு வடமேற்கே வெஸ்டீன்ட்ராலேண்ட் அருகேயுள்ள பகுதியில் தெற்கு பாரதீப் (ஒடிசா)வுக்கு 320 கீ.மீ தொலைவிலும், தெற்கு-தென்மேற்கு திகாவுக்கு (மேற்குவங்கம்) 470 கி.மீ தொலைவிலும் மற்றும் தெற்கு மற்றும் தென்-மேற்கு கேபுபாரா (வங்கதேசம்) 610 கி.மீ தொலைவிலும் மே 19ம் மாலை 5.30 மணிக்கு மையம் கொண்டிருந்தது.
இது வங்கக் கடலின் வடமேற்குக்கு குறுக்கே வடக்குவடகிழக்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் வங்கதேசம் கடலோரப் பகுதியில் திகா(மேற்கு வங்கம்) மற்றும் ஹதியா தீவுகள் (வங்க தேசம்) அருகே சுந்தர்பன்ஸ் பகுதியில் இன்று மதியம் முதல் மாலைக்குள் அதி தீவிர புயலாக மணிக்கு அதிகபட்சம் 155-185 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் எனத் தெரிகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், பாரதிப்(ஒடிசா), மற்றும் கோபல்பூர் (ஒடிசா) ஆகிய இடங்களில் உள்ள டோப்ளர் வானிலை ரேடார் மூலம்
உம்-பன் கடும் சூறாவளிப் புயல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
(வெளியீட்டு அடையாள எண்: 1625273)
வருகையாளர் எண்ணிக்கை : 100