புவி அறிவியல் அமைச்சகம்
தெற்கு வங்கக்கடலின் மேற்கு-மத்திய மற்றும் மத்தியப் பகுதிகளில் கடும் சூறாவளிப் புயல் ‘அம்பன்’; மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடலோரங்களுக்கான புயல் எச்சரிக்கை; ஆரஞ்சு தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAY 2020 3:46PM by PIB Chennai
இந்திய வானிலை ஆய்வுத்துறையின் புயல் எச்சரிக்கைப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய பத்திரிகைக் குறிப்பின்படி (IST 15.00 மணியளவில்) தெரிவிப்பதாவது:
அம்பன் என்று கூறப்படும் மிகக் கடும் சூறாவளிப்புயல் ( உம்பன் என உச்சரிக்கப்படுகிறது), தெற்கு வங்கக்கடலின் மேற்கு-மத்திய மற்றும் மத்தியப் பகுதிகளில் இருந்து , கடந்த 6 மணி நேரமாக , மணிக்கு 4 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வடக்கு முகமாக நகர்ந்து, கடும் சூறாவளி புயலாகத் தீவிரமடைந்து, இன்று 18 மே 2020, இந்திய நேரப்படி11.30 மணி அளவில் தெற்கு வங்கக்கடலின் மேற்கு-மத்தியப்பகுதி மற்றும் மத்தியப்பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. அட்சரேகை 13.4°N வடக்கு மற்றும் தீர்க்கரேகை 86.2°E கிழக்கு பாராதீப்பிற்கு (ஒடிசா) தெற்கே சுமார் 770 கிலோமீட்டர் தொலைவில், திகாவிற்கு (மேற்குவங்கம்) தெற்கு, தென்மேற்கு திசையில் 920 கிலோமீட்டர் தொலைவில், கேப்புப்பாராவிற்கு (மேற்கு வங்கம்) தெற்கு தென்மேற்கு திசையில் 1040 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இது மேலும் சில மணி நேரத்துக்கு வடக்கு முகமாக நகர்ந்து, அதன் பின்னர் வடக்கு, வடகிழக்கு திசையில் வடமேற்கு வங்கக்கடலில் மேற்கு வங்கம், பங்களாதேஷ் இடையே, திகா(மேற்கு வங்கம்) , ஹடியா தீவுகள் ( பங்களா தேஷ்) கரைக்கு இடையே சுந்தரவனக்காடுகளுக்கு அருகே மே 20-ஆம் தேதி பிற்பகல் அல்லது மாலையில், அதிகபட்சமாக மணிக்கு 165-175 கிலோமீட்டர் வேகத்தில் மிகக் கடும் சூறாவளிப் புயலாகக் கரையைக் கடக்கக்கூடும்.
அடுத்த 12 மணி நேரத்தில் இது கிட்டத்தட்ட வடக்குமுகமாக மெல்ல நகர்ந்து மீண்டும் வடக்கு வடமேற்குமுகமாகத் திரும்பி வங்காள விரிகுடாவில் வடமேற்கில் வேகமாக நகர்ந்து மேற்கு வங்கம் பங்களாதேஷ் கடற்கரைகளை, திகா (மேற்குவங்கம்) , ஹடியா தீவுகள் (பங்களாதேஷ்) ஆகியவற்றுக்கிடையே 20 மே 2020 அன்று மதியம் அல்லது மாலை மிக கடுமையான சூறாவளி புயலாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1624889)
வருகையாளர் எண்ணிக்கை : 277