புவி அறிவியல் அமைச்சகம்

அகில இந்திய அளவிலான வானிலை அறிக்கை

Posted On: 16 MAY 2020 9:20PM by PIB Chennai

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தேசிய வானிலை முன்கணிப்பு மையம் அண்மையில் வெளியிட்ட (இரவு 8.45 மணிப்படி) அறிக்கையின்படி

 

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இருந்த தீவிர காற்றழுத்தம், கடந்த 6 மணிநேரமாக அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேலும் வலுவடைந்து  உம்-பன் என்ற சூறாவளிப் புயலாக மாறியுள்ளது. இன்று மே 16, தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இருந்த தீவிர காற்றழுத்தம், கடந்த 6 மணிநேரமாக அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேலும் வலுவடைந்து  உம்-பன் என்ற சூறாவளிப் புயலாக மாறியுள்ளது. இன்று மே 16, 2020 மாலை 5.30 மணி நிலவரப்படி, அதே பிராந்தியத்தில் மையம் கொண்டுள்ளது. இது 10.9°N அட்சரேகை மற்றும் 86.3°E தீர்க்கரேகைக்கு அருகே, பாரதீப்-பிலிருந்து (ஒடிசா) 1040 கி.மீ., தெற்கிலும், திகா பகுதியிலிருந்து (மேற்கு வங்கம்) தெற்கு-தென்மேற்கில் 1,200 கி.மீ., தொலைவிலும், கேபுபரா (பங்களாதேஷ்) பகுதியிலிருந்து தெற்கு-தென்மேற்கில் 1,300 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இது 12 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து தீவிர சூறாவளிப் புயலாகவும், 18-ம் தேதி காலையில் மிக தீவிர சூறாவளிப் புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளதுஇது தொடக்கத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் மே 17 வரை நகர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, திசைமாறி வங்காள விரிகுடாவின் வடமேற்கில் வடக்கு-வடகிழக்கு திசையில், மேற்குவங்கம் மற்றும் அதனையொட்டிய வடக்கு ஒடிசா கடலோரப் பகுதியை நோக்கி மே 18 முதல் 20-ம் தேதி வரை நகரும்.மாலை 5.30 மணி நிலவரப்படி, அதே பிராந்தியத்தில் மையம் கொண்டுள்ளது. இது 10.9°N அட்சரேகை மற்றும் 86.3°E தீர்க்கரேகைக்கு அருகே, பாரதீப்-பிலிருந்து (ஒடிசா) 1040 கி.மீ., தெற்கிலும், திகா பகுதியிலிருந்து (மேற்கு வங்கம்) தெற்கு-தென்மேற்கில் 1,200 கி.மீ., தொலைவிலும், கேபுபரா (பங்களாதேஷ்) பகுதியிலிருந்து தெற்கு-தென்மேற்கில் 1,300 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இது 12 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து தீவிர சூறாவளிப் புயலாகவும், 18-ம் தேதி காலையில் மிக தீவிர சூறாவளிப் புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளதுஇது தொடக்கத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் மே 17 வரை நகர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, திசைமாறி வங்காள விரிகுடாவின் வடமேற்கில் வடக்கு-வடகிழக்கு திசையில், மேற்குவங்கம் மற்றும் அதனையொட்டிய வடக்கு ஒடிசா கடலோரப் பகுதியை நோக்கி மே 18 முதல் 20-ம் தேதி வரை நகரும்.

 



(Release ID: 1624736) Visitor Counter : 127


Read this release in: English , Urdu , Hindi