நிதி அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் வெள்ளப்பாதிப்பைத் தடுக்கவும் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தவும் ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
15 MAY 2020 6:35PM by PIB Chennai
மேற்கு வங்கத்தில் உள்ள தாமோதர் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கப் பகுதியில் நீர்ப்பாசன சேவைகளை மேம்படுத்தவும் வெள்ளத் தடுப்பு நிர்வாகத்துக்கும் 145 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலான ஒரு கடன் ஒப்பந்தத்தில் இந்திய அரசு, மேற்குவங்க அரசு மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து இன்று கையெழுத்திட்டு உள்ளன.
மேற்குவங்க பேரளவு நீர்ப்பாசன மற்றும் வெள்ளத் தடுப்பு நிர்வாகத் திட்டமானது மேற்குவங்கத்தின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 27 லட்சம் விவசாயிகளுக்கு பலன் தரும் திட்டம் ஆகும். மேலும் இந்தத் திட்டம் 393,964 ஹெக்டேர் நிலப்பரப்புக்கு சிறப்பான நீர்ப்பாசன வசதிகளையும் தரும். பருவநிலை மாறுதலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையிலும் வருடாந்திர வெள்ளச் சேதத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் இந்தத் திட்டமானது இருக்கும்.
இந்திய அரசின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் நிதியமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் துறையின் கூடுதல் செயலாளர் திரு. சமீர் குமார் கார்ரே கையெழுத்திட்டு உள்ளார். அதே போன்று மேற்குவங்க அரசின் சார்பில் முதன்மை குடியிருப்பு ஆணையர் திரு கிருஷ்ணா குப்தாவும் உலக வங்கி சார்பில் அதன் இந்திய பிரிவு இயக்குனர் திரு. ஜுனைத் அகமத் ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர்.
(रिलीज़ आईडी: 1624418)
आगंतुक पटल : 283