அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பார்க்கின்சன் நோயை நுட்பமாகக் கண்டறிய புதிய கருவி

Posted On: 14 MAY 2020 5:29PM by PIB Chennai

பார்க்கின்சன் நோய் நரம்பு சிதைவு காரணமாகப் பொதுவாகக் காணப்படும் நோய் ஆகும். இதுவரை அதற்கு சிகிச்சை எதுவும் இல்லை. இந்த நோய் ஏற்படுவதற்கு ஆல்பா சினுக்ளின் எனப்படும் புரதத்தின் திரட்சி முக்கியப் பங்கு எனத்தெரிய வந்துள்ளது. இதன் தாக்கம் நோயாளியின் நடு மூளைப் பகுதியில் அதிக அளவில் உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பார்க்கின்சன் நோயில் இந்தப் புரதத் திரட்சி எப்படி உருவாகிறது என்றும் அந்த அளவற்ற புரதத் திரட்சியால் எப்படி நரம்பணு செல்கள் மரணிக்க நேருகிறது என்றும் ஆராய்ந்து வருகிறார்கள். இந்தப் புதிர் விடுவிக்கப்பட்டால், நோய்க்கான மருந்தைக் கண்டறிவது எளிதாகிவிடும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

அண்மையில், தன்பாதில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின்  இந்திய சுரங்கவியல் கல்வி நிலையமும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி  குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் கோல்கத்தா, இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனமும் இணைந்து இதற்கான தீர்வு காண்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றன.

அதன் விளைவாக, இஸட் ஸ்கேன் முறை என்ற தொழில்நுட்பத்தை அறிய விரும்புகிறார்கள். ஆல்பா சினுக்ளின் புரதத் திரட்சியின் ஆரம்ப நிலையும் இறுதி கட்டமும் கண்டறிவதற்கு இது பெரிதும் துணை புரியும். பிற புரதங்களை விட புரதத் திரட்சியால் ஏற்படும் தாக்கம், பின் விளைவு ஆகிய பல்வேறு நிகழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன.

 


(Release ID: 1624050) Visitor Counter : 247


Read this release in: English , Urdu , Hindi , Punjabi