நிதி அமைச்சகம்
பணப் பரிமாற்ற விகித அறிவிக்கை எண் 41/2020 – சுங்கம் (என்.டி)
Posted On:
06 MAY 2020 6:26PM by PIB Chennai
சுங்கவரிச் சட்டம் 1962ன் (1962 இன் 52) பிரிவு 14 வழங்கியுள்ள அதிகாரத்தைச் செயல்படுத்தவும் 16 ஏப்ரல் 2020 தேதியிட்ட அறிவிக்கை எண் 39/2020 சுங்கத்தை (என்.டி) நீக்கியும் (நீக்குவதற்கு முன்பு மேற்கொண்ட தொடர்புடைய அம்சங்கள் அல்லது செய்ய விடுபட்டுப் போன செயல்கள் இதில் அடங்காது) மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகளின் மத்திய வாரியம் இங்கே இணைக்கப்பட்டுள்ள அட்டவணை I மற்றும் அட்டவணை II ஒவ்வொன்றிலும் வரிசை (2)ல் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு அந்நிய நாட்டு பணத்துக்குமான இந்திய பணமதிப்பு அல்லது இந்திய பண மதிப்புக்கான அயல்நாட்டு பணமதிப்பு ஆகியவற்றுக்கான பரிமாற்ற விகிதமானது வரிசை (3)ல் உள்ள தொடர்புடைய பதிவுக்கு எதிராகக் குறிப்பிடப்பட்டுள்ள விகிதமாக இருக்கும் என்றும் இது சரக்குகளை இறக்குமதி செய்வது மற்றும் ஏற்றுமதி செய்வது தொடர்பாக அந்தப் பிரிவில் சொல்லப்பட்டுள்ள நோக்கத்துக்கு உரியதாகும் என்றும் இது 7 மே 2020 முதல் அமலுக்கு வரும் என்றும் நிர்ணயித்துள்ளது.
(Release ID: 1621811)
Visitor Counter : 148