நிதி அமைச்சகம்

அரசுபங்குகள் 5.09 சதவீதம் ஏலவிற்பனை (மறுவெளியீடு), புதிய 10 ஆண்டுகள் அரசுபங்குகள் 2030’ ஏலவிற்பனை (வெளியீடு) மற்றும் 7.19 சதவீத அரசுபங்குகள் 2060’ ஏலவிற்பனை (மறுவெளியீடு).

प्रविष्टि तिथि: 04 MAY 2020 9:24PM by PIB Chennai

புதுதில்லி, மே 04, 2020

மத்திய அரசு வெளியிட்டுள்ள விற்பனை (வெளியீடு / மறுவெளியீடு) அறிவிப்பின்படி (1) 5.09 சதவீத  அரசு பங்குகள்’  அறிவிக்கப்பட்ட ரூ.3,000 கோடி (குறைந்தபட்சம்) அடிப்படை விலை ஏலத்திலும், (2) புதிய 10 ஆண்டுகள் அரசு பங்குகள் 2030 அறிவிக்கப்பட்ட ரூ.10,000 கோடி (குறைந்தபட்சம்) லாப அடிப்படை ஏலத்திலும் மற்றும் (3) 7.19 சதவீத அரசுபங்குகள் 2060 அறிவிக்கப்பட்ட ரூ.6,000 கோடி (குறைந்தபட்சம்) அடிப்படை விலை ஏலத்திலும் விற்பனை (மறுவெளியீடு) செய்யப்ப டஉள்ளன. இந்த பங்குகளில் மத்திய அரசு கூடுதலாக ரூ.2,000கோடி அளவுக்கு ஒவ்வொன்றிலோ அல்லது அனைத்திலும் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு உண்டு. இந்த ஏலம் பல்முனை விலை முறையில் நடைபெறும். இந்த ஏலம், இந்திய ரிசர்வ் வங்கி, மும்பை அலுவலகம், கோட்டை, மும்பை அலுவலகத்தால்  மே 08ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும்.


(रिलीज़ आईडी: 1621165) आगंतुक पटल : 203
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , Urdu , हिन्दी , English