அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவும் அறிவியல் வெளியீடுகளும் அதிகரித்துள்ளன

Posted On: 01 MAY 2020 6:01PM by PIB Chennai

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக இந்தியாவின் மொத்த செலவு 2008க்கும் 2018க்கும் இடையே மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு அரசு துறைகள் முக்கிய காரணம் ஆகும். மேலும், சர்வதேச அளவில் சிறந்த சில நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம்பெறும் அளவுக்கு அறிவியல் வெளியீடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, வெளியிட்டுள்ள தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கணக்கெடுப்பு 2018ன் அடிப்படையிலான ஆராய்ச்சி, மேம்பாட்டு புள்ளிவிவரங்கள் மற்றும் குறியீடுகள் 2019-20ன் மூலம் இது தெரியவருகிறது.

"உயர் கல்வி, ஆராய்ச்சிமேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆதரவு, அறிவுசார் சொத்துரிமை மற்றும் தொழில் போட்டித்திறன் ஆகியவற்றில் ஆதாரம்-சார்ந்த கொள்கை முடிவுகள் மற்றும் திட்டங்களை வகுக்க நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குறியீடுகள் பற்றிய அறிக்கை ஒரு அசாதரணமான முக்கிய ஆவணம் ஆகும்," என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர், பேராசிரியர். அசுதோஷ் ஷர்மா கூறினார்.

வெளியீடுகள் அதிகரித்திருப்பதன் மூலம் தேசிய அறிவியல் கழக தரவுத்தளத்தின் மதிப்பீடுகளில் உலக அளவில் மூன்றாம் இடத்திலும், அறிவியல் மற்றும் பொறியியல் முனைவர் பட்டங்களிலும் மூன்றாம் இடத்திலும் இந்தியா இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. பத்து லட்சம் மக்களுக்கு ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை 2000 ஆண்டில் இருந்து இரட்டிப்பு ஆகியுள்ளது.

அறிக்கையின் சில முக்கிய கண்டுபிடிப்புகள் பின் வருமாறு:

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக இந்தியாவின் மொத்த செலவு 2008 - 2018க்கு இடையே மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளியில் இருந்து தரும் ஆதரவு கணிசமாக உயர்ந்துள்ளது

பத்து லட்சம் மக்களுக்கு ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை 2000 ஆண்டில் இருந்து இரட்டிப்பு ஆகியுள்ளது

தேசிய அறிவியல் கழக தரவுத்தளத்தின் படி அறிவியல் வெளியீடுகளில் உலக அளவில் மூன்றாம் இடத்தில் இந்தியா இருக்கிறது

உள்ளுறை காப்புரிமை பதிவு செய்வதில் உலகத்திலேயே இந்தியா ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது

மேலும் தகவல்களுக்கு, டாக்டர் பிரவீன் அரோரா, Sc-G . தலைவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல்: parora@nic.in, கைபேசி: +91-9654664614

***(Release ID: 1620405) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi , Punjabi