அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
துணிகளில் படிந்திருக்கும் தொற்றுகளை நீக்கும் குறைந்த விலை நானோ மெட்டீரியலை ஐஎன்எஸ்டியின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்
प्रविष्टि तिथि:
25 APR 2020 3:42PM by PIB Chennai
வெள்ளி மற்றும் இதர உலோகப் பொருட்களுக்கு மாற்றாக, கண்ணுக்குத் தெரியும் ஒளியில் நுண்ணுயிர் தொற்றை நீக்கும் உலோகம் அல்லாத குறைந்த விலை நானோமெட்டீரியலை, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஐஎன்எஸ்டியின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஐஎன்எஸ்டியின் டாக்டர் கமலக்கண்ணன் கைலாசம் குழு டாக்டர் ஆசிப்கான் ஷாநவாசுடன் சேர்ந்து நடத்திய ஆய்வு ஜர்னல் கார்பன் சஞ்சிகையில் வெளியாகி உள்ளது. கண்ணுக்கு தெரியும் ஒளியில் பாக்டீரியாவுக்கு எதிரான செயல்பாட்டுக்கான கார்பன் நைட்ரேட் குவாண்டம் புள்ளிகளை அவர்கள் சோதனை செய்தனர். இதன் முடிவில், பாலூட்டிகளின் செல்களுடன் உயிர் இணக்கத்தன்மை கொண்ட கிருமி நீக்கியாக இது செயல்படுவது கண்டறியப்பட்டது. உலோகம், உலோகம் இல்லாத குறைக் கடத்திகள் மற்றும் விலை உயர்ந்த வெள்ளிக்கு மாற்றாக குறைந்த விலையில், சிறந்த பாக்டீரியா நீக்கியாக இது செயல்படுகிறது என அந்தக் குழு தெரிவித்துள்ளது.
(रिलीज़ आईडी: 1618247)
आगंतुक पटल : 258