அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மறுசுழற்சி முறையில் உலோக – காற்று பேட்டரிக்கு குறைந்த விலை எலக்ட்ரோ-வினையூக்கிகளை உருவாக்க மீன்களின் செவுள்கள் பயன்படுத்தப்படுகின்றன

Posted On: 20 APR 2020 12:45PM by PIB Chennai

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி பெற்ற நிறுவனமான, மொஹாலியை சேர்ந்த மீநுண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (INST), சமீபத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் ஆற்றல் மாற்ற சாதனங்களை உருவாக்க உதவும் முயற்சியின் ஒரு பகுதியாக, மீனின் செவுள்களை கொண்டு, திறமையான, குறைந்த விலை மின்-வினையூக்கியைக் கொண்டு வந்துள்ளது.

இந்த bio - inspired கார்பன் மீநுண் அமைப்பு, எரிபொருள் மின்கலம், (Fuel cell), பயோ எரிபொருள் மின்கலம், மற்றும் உலோக மின்கலம் (Metal – air battery) உள்ளிட்ட பல புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றம் மற்றும் சேமிப்புத் தொழில்நுட்பங்களை உணர்ந்து கொள்வதில் உள்ள தடையை சமாளிக்க உதவும்

For details : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1616294

************



(Release ID: 1616376) Visitor Counter : 106