அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கரிமச் சேர்மானத்தலான மீத்திறன் மின்தேக்கிகளுக்கான (Organic Super Capacitors) நீடித்த செயல்பாடுள்ள ஒரு பொருள், குறைந்த செலவிலான அதிகரித்துக் கொள்ளக் கூடிய மின் சேமிப்புத் திறனை வழங்கும்
Posted On:
17 APR 2020 4:49PM by PIB Chennai
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படும், மொஹாலியில் உள்ள மீநுண் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் (Institute of Nano Science and Technology - INST) விஞ்ஞானிகள், கரிமச் சேர்மானத்தலான மீத்திறன் மின்தேக்கிகளில் (Organic Super Capacitors) பயன்படுத்தக் கூடிய நீடித்த செயல்பாடுள்ள ஒரு பொருளை உருவாக்கியுள்ளனர். மின்னணு மின்னேற்றப் பரிமாற்றம் மூலமாக மின்சாரத்தை சேமிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும். பேட்டரிகளுக்கு மாற்றாக, மின்சாரத்தை சேமிக்கும் சாதனங்களை, திறனை அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்புடன், குறைந்த செலவில் உருவாக்க இது உதவிகரமாக இருக்கும்.
டாக்டர் ராமேந்திர சுந்தர் தேவ் மற்றும் ஐ.என்.எஸ்.டி.யின் அவரது குழுவினர் சூடோகெப்பாசிட்டர்களின் திறனை மேம்படுத்த உதவக் கூடிய புதிய செயற்கை உத்தியிலான சூத்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். மீத்திறன் மின்தேக்கிகள் என்பவை மின்னணுப் பரிமாற்றம் மூலமாக மின்சக்தியை சேமிக்க உதவக் கூடியவை.
அவர்கள் உருவாக்கியுள்ள புதுமையான அணுகுமுறையும், மூலக்கூறு அளவிலான செயல்பாட்டு அமைப்பும், சூடோ கெப்பாசிட்டர்களின் குறைந்த ஸ்திரத்தன்மை மற்றும் குறைந்த அளவிலான மின் சேமிப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுத்தி, அதன் செயல்பாட்டை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆர்கானிக் சூடோ கெப்பாசிட்டர்கள் துறையில் எதிர்கால ஆராய்ச்சியை ஊக்குவிப்பதாக இது அமையும் என்றும், மின்தேவையில் சுயசார்பு நிலையை உறுதிப்படுத்துவதில் செம்மையான செயல் திட்டத்தை அளிப்பதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
[வெளியீடு: Journal of Material Chemistry A, 2020, DOI: 10.1039/d0ta02477e (I.F: 10.733).
மேலும் விவரங்களுக்கான தொடர்புக்கு - டாக்டர் ராமேந்திர சுந்தர் தேவ், இமெயில்: rsdey@inst.ac.in]
****
(Release ID: 1615684)
Visitor Counter : 220