புவி அறிவியல் அமைச்சகம்
பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தகவல்
கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் ஜூன் 1 அன்று பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
प्रविष्टि तिथि:
15 APR 2020 3:25PM by PIB Chennai
பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை இன்று அறிவித்தது. "நாட்டில் தென்மேற்குப் பருவமழை (ஜூனில் இருந்து செப்டம்பர் வரை) மொத்தத்தில் இயல்பாக (96-104%) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று தன்னுடைய முதல்கட்ட நீண்டகால முன்னறிவிப்பில் இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
காணொளி சுட்டி மூலம் ஊடக சந்திப்பில் பேசிய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம் ராஜீவன், 2020 தென்மேற்கு பருவமழைக்கான இந்திய வானிலை ஆய்வுத் துறையின் நீண்டகால முன்னறிவிப்பை வெளியிட்டார்.
இந்தியாவில் தென்மேற்குப் பருவமழையின் தொடக்கம்/வளர்ச்சி மற்றும் திரும்பப் பெறுதலுக்கான இயல்பு தேதிகளையும் இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டது.
நீண்ட கால சராசரி அளவுகளின் படி, பருவ மழை (ஜூனில் இருந்து செப்டம்பர் வரை) 100 சதவீதம் இருக்கும் (மாதிரி பிழை 5 சதவீதம்) என்று எதிர்பார்க்கப்படுவதாக டாக்டர் ராஜீவன் தெரிவித்தார். 1961 முதல் 2010 வரையிலான காலகட்டத்துக்கான, நாட்டின் ஒட்டுமொத்தப் பருவ மழையின் நீண்ட கால சராசரி 88 சென்டிமீட்டர் ஆகும்.
நாட்டில் விவசாயத்தை நம்பி இருக்கும் பொருளாதாரத்தை நிரப்பும் தென்மேற்கு பருவமழை காலம், தெற்கு முனையான கேரளாவை ஜீன் முதல் வாரத்தில் பொதுவாக முதலில் தொட்டு, செப்டம்பரில் ராஜஸ்தானில் பின்வாங்கத் தொடங்கும்.
கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் ஜூன் 1 அன்று பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
(रिलीज़ आईडी: 1614738)
आगंतुक पटल : 256