சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

நேரடி வரிகள் விவாத் சே விஸ்வாஸ் சட்டம், 2020” குறித்து அகில இந்திய காணொலி கருத்தரங்கை வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மேற்கொண்டது

प्रविष्टि तिथि: 06 APR 2020 5:55PM by PIB Chennai

ஒட்டுமொத்த உலகமும் கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலால் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்திய அரசின் அறிவிப்பின்படி, மார்ச் 24, 2020 முதல் 21 நாட்களுக்கு ஒட்டுமொத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சூழலில், “நேரடி வரிகள் விவாத் சே விஸ்வாஸ் சட்டம் 2020” என்ற தலைப்பில் தனது உறுப்பினர்களுடன் அகில இந்திய அளவில் காணொலிக் கருத்தரங்கை வருமானவரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் இன்று மேற்கொண்டது. இதில், தில்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், லக்னோ, புனே மற்றும் சண்டிகர் பகுதிகளிலிருந்து வழக்கறிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதில் தலைமை உரையாற்றிய நீதிபதி பி.பி.பட், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள், பிரச்சினைகளுக்கு மாற்றுமுறை தீர்வு முறைகளில் ஈடுபட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். பிரச்சினைகள் இல்லாத வரி வசூலிப்பு முறையை அமல்படுத்த மத்திய அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் திரு.பி.சி.மோடி பேசும்போது, விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தின் நோக்கம் குறித்தும், இதனை மாபெரும் வெற்றிபெறச் செய்வதில் இந்தத் திட்டத்தில் தொடர்புடையவர்களின் பங்கு குறித்தும் எடுத்துரைத்தார். இந்த சட்டத்தில் உரிய திருத்தங்களை கொண்டுவருவது குறித்து ஒவ்வொரு முனையிலிருந்தும் வரும் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளும் வகையில், மிகப்பெரும் முயற்சியை அரசும், நேரடி வரிகள் வாரியமும் மேற்கொண்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். மேலும், சந்தேகங்களுக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ற முறையில் பதில் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சட்டம் குறித்து பல்வேறு வழிகளிலும் மத்திய நிதியமைச்சகத்தின் இணைச் செயலாளர்களான திரு.கமலேஷ் சந்திர வர்ஷ்ணி, திரு.ராஜேஷ்குமார் பூட் ஆகியோர் விளக்கம் அளித்தனர். மேலும், சட்டம் குறித்து விளக்கியதோடு, அதனை அமல்படுத்துவதில் உள்ள நுணுக்கங்களையும் எடுத்துரைத்தனர்.

நீண்டகாலத்துக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம், மிகவும் சிறப்பானது என்று வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள் ஒருமனதாக கருத்து தெரிவித்தனர்.

*****


(रिलीज़ आईडी: 1611886) आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Telugu