மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கோவிட் 19 குறித்து நாட்டிலுள்ள பல்வேறு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமைகளுடன், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் காணொளி மாநாடு

प्रविष्टि तिथि: 03 APR 2020 8:40PM by PIB Chennai

உலகம் முழுவதிலும், நாட்டின் பல இடங்களிலும், பரவி வரும் வைரஸ் நோய் குறித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றின் மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கல்வி ஸ்தாபன தலைமைகளுடன் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று காணொளி மூலம் உரையாடினார். இக்காணொளி மாநாட்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து 800க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

நாடு முழுவதிலுமிருந்து, 1000 பல்கலைக்கழகங்கள், 45,000 கல்லூரிகள், 15 லட்சம் மாணவர்கள், ஒரு கோடிக்கும் அதிகமான ஆசிரியர்கள், 33 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக கணிசமான பங்களித்திருக்கிறார்கள் என்று கூறி, அதற்கான அவர்களது முயற்சிகளை அவர் பாராட்டினார். அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் குறைகளையும் திரு பொக்ரியால் பொறுமையுடன் கேட்டறிந்தார்.

இந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு புதிய சக்தி பெறும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளபடி ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு, அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றியும், அலைபேசிகளில் உள்ள டார்ச்சுகளைக் காண்பித்தும் ஒளி வீசச் செய்து, தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் திரு. பொக்ரியால் அனைவரையும் கேட்டுக் கொண்டார்

 


(रिलीज़ आईडी: 1611002) आगंतुक पटल : 137
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Kannada , हिन्दी , Assamese , Gujarati , Telugu