வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு மாநிலங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவசரப் பொருட்களை அனுப்புவதற்கு பிரத்யேக சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்படும் - டாக்டர்.ஜித்தேந்திர சிங்
प्रविष्टि तिथि:
29 MAR 2020 8:49PM by PIB Chennai
பொது முடக்கச் சூழ்நிலையில், வடகிழக்கு மாநிலங்களுக்கு , அத்தியாவசியப் பொருட்கள் தவிர, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவசரமாகத் தேவைப்படும் பொருட்களை அனுப்புவதற்கு பிரத்யேகமாக சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை மத்திய அமைச்சர் டாக்டர்.ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
அந்தப் பிராந்தியத்தின் விமான நிலையங்கள் மேற்கொண்ட முன்முயற்சிகளுக்கு சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தச் சோதனையான காலகட்டத்தில், நாட்டின் மற்ற பகுதிகளைப் போலவே, வடகிழக்கு பிராந்தியமும் கவனிக்கப்பட்டு வருவதை மக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில் இது செயல்படுத்தப்படும்.
(रिलीज़ आईडी: 1609203)
आगंतुक पटल : 147