வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

சிவில் விமானப் போக்குவரத்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 04 MAR 2020 4:12PM by PIB Chennai

ஏர் இண்டியா நிறுவனத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100 சதவீதம் வரை முன்அனுமதிப் பெறாமல்  முதலீடு செய்ய  அனுமதிக்கும் வகையில், தற்போதுள்ள வெளிநாட்டு முதலீடு அனுமதிக் கொள்கையில் திருத்தம் செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போது விமானப் போக்குவரத்து சேவை / உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை ஆகியவற்றில் 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது  அனுமதி பெறாமல் 49 சதவீதமாகவும், அதற்கும்  கூடுதலானது அரசு அனுமதி பெற்றும் என உள்ளது.  இருப்பினும், விமானப் போக்குவரத்து சேவை / உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை ஆகியவற்றில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு அனுமதி பெறாத வகையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.   1937 ஆம் ஆண்டின் விமானப்போக்குவரத்து விதிகளின் படி வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது இந்திய நாட்டினராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.  இருப்பினும், தற்போதைய கொள்கையின் படி, ஏர் இண்டியா நிறுவனத்தைப் பொறுத்தவரை, வெளிநாட்டு  விமான நிறுவனங்கள் உட்பட நேரடியான அல்லது மறைமுகமான முதலீடு 49 சதவீதத்திற்கும் கூடுதலாக இருக்கக்கூடாது.  எனவே, விமானப் போக்குவரத்து சேவை / உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை ஆகியவற்றில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் நேரடி முதலீடு 100 சதவீதம் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், ஏர் இண்டியா நிறுவனத்தில் 49 சதவீதம் மட்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

*********************


(Release ID: 1605213) Visitor Counter : 140


Read this release in: English , Hindi , Telugu , Kannada