பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
அறிவியல் & தொழில்நுட்பத் துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய பெண்களின் பெயரில் 11 இருக்கைகள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு
Posted On:
29 FEB 2020 4:56PM by PIB Chennai
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளம் பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு, அவர்களை ஊக்குவித்து அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ஈர்க்கும் வகையிலும், தலைசிறந்த இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் பெயரில் 11 இருக்கைகள் அமைக்கப்படும் என மத்திய அரசு இன்று (29.02.2020) அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு தேசிய அறிவியல் தினத்தின் மையக் கருத்தான, ‘அறிவியலில் பெண்கள்’ என்பதற்கு ஏற்ப, பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
வேளாண்மை, உயிரி தொழில்நுட்பம், நோய் எதிர்ப்பு, தாவர மருந்து, உயிர்வேதியியல், மருத்துவம், சமூக அறிவியல், புவி அறிவியல் & வானிலை, பொறியியல், கணிதம் மற்றும் இயற்பியல் & அடிப்படை ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளின் ஆராய்ச்சிக்காக 11 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் ஒரு இருக்கை பிரபல மானுடவியல் வல்லுநர் டாக்டர் ஐராவதி கார்வி பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
விவரம் வருமாறு:-
வ.எண்
|
இருக்கை அமைக்கப்படும் பெயர்
|
விஞ்ஞானி தொடர்புடைய துறை
|
1.
|
டாக்டர் அர்ச்சனா ஷர்மா (1932 – 2008) பிரபல உயிரணுமரபியலாளர்
|
வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த ஆராய்ச்சி
|
2.
|
டாக்டர் ஜானகி அம்மாள் (1897-1984) தாவரவியல் முன்னோடி
|
உயிரி தொழில்நுட்பம்
|
3.
|
டாக்டர் தர்ஷன் ரங்கநாதன் (1941-2001)கரிம வேதியியலாளர்
|
நோய் எதிர்ப்பியல்
|
4.
|
டாக்டர் ஆஷிமா சட்டர்ஜி (1917-2006) உயர் சிறப்பு வேதியியலாளர்
|
கரிம வேதியியல், தாவர மருத்துவம்
|
5.
|
டாக்டர் கடம்பினி கங்குலி (1861-1923) மருத்துவர்
|
மருத்துவம்
|
6.
|
டாக்டர் ஐராவதி கார்வி (1905-1970) மானுடவியல் ஆய்வு
|
சமூகவியல்
|
7.
|
டாக்டர் அண்ணா மணி (1918-2001) இந்திய வானியல் முன்னோடி
|
வானியல்
|
8.
|
டாக்டர் ராஜேஷ்வரி சட்டர்ஜி (1922-2010) கர்நாடகாவின் முதல் பெண் பொறியாளர்
|
பொறியியல்
|
9.
|
டாக்டர் ராமன் பரிமளா (பிறப்பு – 1948) கணிதவியலாளர் (பட்நாகர் விருது, 1987)
|
கணிதம்
|
10.
|
பிபாசவுத்ரி (1913-1991)
|
இயற்பியல்
|
11.
|
கமல் ரணதிவே (8 நவம்பர் 1917-2001) (மருத்துவம்)
|
உயிரி மருத்துவ ஆராய்ச்சி
|
*****
(Release ID: 1605041)
Visitor Counter : 184