அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உயிரி தொழில்நுட்பத்துறை நிறுவன தினக் கொண்டாட்டம்
உலகின் முதல் 12 உயிரித்தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக இந்தியா தேர்வு
Posted On:
25 FEB 2020 3:12PM by PIB Chennai
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு உட்பட்ட உயிரித் தொழில்நுட்பத்துறை, தனது 34-வது நிறுவன தினம் 26.02.2020 அன்று புதுதில்லியில் உள்ள தேசிய நோய்த்தடுப்பு மருந்து நிறுவனத்தில் கொண்டாட உள்ளது.
மத்திய அறிவியல் தொழில்நுட்பம், புவிஅறிவியல் மற்றும் சுகாதாரம் & குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை விருந்தினராக பங்கேற்று விருதுகளை வழங்க உள்ளார். நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிலையிலான ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அறிவியல் அமைப்புகள், தேசிய ஆய்வுக்கூடங்கள் போன்றவற்றில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் பங்களிப்பை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் விதமாக, இந்தத் துறை தொடங்கப்பட்டதிலிருந்தே பல்வேறு விருதுகள் ஏற்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
உயிரித் தொழில்நுட்பத்துறையால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு விருதுகள் DBT BRITE (Biotechnology Research Innovation and Technology Excellence Awards) என்ற பெயரில் தற்போது ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றுள் சில விருதுகளுக்கு இந்திய அறிவியல் துறைக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய பிரபல விஞ்ஞானிகளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உயிரித்தொழில்நுட்பத் துறையால் வழங்கப்படும் DBT BRITE விருதுகள் வருமாறு:
- ஹர் கோபிந்த் குரானா – புதுமைக்கான இளம் உயிரித்தொழில்நுட்ப விஞ்ஞானி விருது.
- எஸ் ராமச்சந்திரன் – தொழில் வளர்ச்சிக்கான தேசிய உயிரி அறிவியல் விருது.
- ஜானகி அம்மாள் தேசிய பெண் உயிரி விஞ்ஞானி விருது.
- டாடா புதுமை ஆராய்ச்சி விருது.
- உயிரித்தொழில்நுட்ப சமூக மேம்பாட்டு விருது
ஐதராபாதில் உள்ள எல் வி பிரசாத் கண் சிகிச்சை மைய முன்னாள் இயக்குநரும். பிரபல விஞ்ஞானியுமான பத்மஸ்ரீ டாக்டர் டி பாலசுப்பிரமணியன், உயிரித்தொழில்நுட்பத் துறை தொடக்க தின உரையாற்ற உள்ளார்.
இந்தியாவில் சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், கடந்த 30 ஆண்டுகளில் உயிரித்தொழில்நுட்பத்துறை கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறது. அரசு மற்றும் தனியார் துறை அளித்து வரும் ஊக்கம் காரணமாக, இத்துறை ஆண்டுக்கு சுமார் 20% வீதம் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது.
உலகில் உள்ள தலைசிறந்த உயிரித்தொழில்நுட்ப மையங்களில் முதல் 12 இடங்களுக்குள் ஒன்றாக இந்தியா தேர்வு பெற்றுள்ளது.
-----
(Release ID: 1604331)
Visitor Counter : 138