மத்திய அமைச்சரவை

இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பெண்களின் இனப்பெருக்க உரிமைகளை பாதுகாக்க புரட்சிகர நடவடிக்கைகள்

Posted On: 19 FEB 2020 4:56PM by PIB Chennai

நாட்டில் பெண்களின் நலனுக்காக,  இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020 எனப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா 2020 நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, மருத்துவ ரீதியிலான கர்ப்ப கால திருத்த மசோதா 2020 நிறைவேற்றப்பட்டது ஆகியவற்றின் தொடர்ச்சியாக  இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  பெண்களின் இனப்பெருக்க உரிமைகளை பாதுகாப்பதற்கான புரட்சிகரமான நடவடிக்கைகளாக இந்த  மசோதாக்கள் அமையும்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன், சட்ட அமலாக்கத்திற்கான அறிவிக்கையை  மத்திய அரசு வெளியிடும்.  இதனையடுத்து, தேசிய வாரியம் அமைக்கப்படும். 

சிகிச்சையகங்களின் உள்கட்டமைப்புக்கான குறைந்தபட்ச தரம், பரிசோதனைக்கூடம், மருத்துவ உபகரணங்கள், பணிபுரியும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேசிய வாரியம் வகுக்கும். 

மத்திய அரசின் அறிவிக்கை வெளியான 3 மாதங்களுக்குள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மாநில வாரியங்கள் மற்றும்  அதிகாரிகளை  நியமிக்கும். 

தேசிய வாரியம்  அறிவிக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மாநிலங்களில் செயல்படும் சிகிச்சையகங்கள் பின்பற்றுவதைக் கண்காணிக்கும் பொறுப்பு மாநில வாரியங்களுக்கு உள்ளது. 

மத்திய தரவுகளை பராமரிக்க தேசிய பதிவேடு மற்றும் பதிவு ஆணையத்திற்கு இந்த மசோதா வகை செய்யும்.  மேலும், தேசிய வாரியம் செயல்படுவதற்கு இது உதவும்.  பாலின தேர்வு, மனித கருமுட்டைகள், அணுக்கள் விற்பனை போன்ற சட்டவிரோத நடைமுறைகளுக்கான முகமைகள், நிறுவனங்களை ஊக்குவிப்போருக்கு கடுமையான தண்டனை வழங்கவும் இந்த மசோதா வகை செய்யும். 

பயன்கள்

நாட்டின் இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப சேவைகளை ஒழுங்குபடுத்துவதே இந்த சட்டத்தின் முக்கிய பயனாக இருக்கும்.  இதனால் மகப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பான உணர்வும் ஏற்படும்.

***************


(Release ID: 1603703) Visitor Counter : 493