நிதி அமைச்சகம்

பொதுமக்களின் வாழ்நிலையை எளிதாக்க, ஊழலற்ற, கொள்கைகளால் வழிநடத்தப்படும் நல்லாட்சி மற்றும் தூய்மையான உறுதிமிக்க நிதி ஆதாரத்தை உறுதிசெய்யும் பட்ஜெட்

Posted On: 01 FEB 2020 2:47PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை உறுதி செய்யும் வகையில் இந்த பட்ஜெட் பொதுமக்களின் வாழ்நிலையை எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உத்வேகம் மிக்க இந்தியா, பொருளாதார மேம்பாடு மற்றும் நலன் காக்கும் இந்தியா ஆகிய மூன்று முக்கிய கருத்தாக்கத்தின் அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

     இன்று நாடாளுமன்றத்தில் 2020-21-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், பொதுமக்களின் வாழ்நிலையை எளிதாக்க இரண்டு முக்கிய அம்சங்கள் அவசியம் என்று கூறினார்.  ஊழலற்ற, கொள்கைகளால் வழிநடத்தப்படும் நல்லாட்சி மற்றும் தூய்மையான உறுதிமிக்க நிர்வாகம் ஆகிய இரண்டு அம்சங்களே அவை.

     பொதுமக்களின் வாழ்நிலையை எளிதாக்கவும், தொழில் தொடங்குவதை எளிதாக்கவும், வரி நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் அதில் காணப்படும் நேர்மைத் தன்மையும், செயல் திறனும் அவசியம் என்றார் அமைச்சர். முறையாக வரி செலுத்துவோர் எந்தவிதத்திலும் அச்சுறுத்தப்படுவதை    இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

     அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள், அரசிதழ் பதிவுறா பதவிகளுக்கான தேர்வுகளை நடத்த தேசிய பணியமர்த்தும் முகமை ஏற்படுத்தப்படும் என்றும், இது சுதந்திரமான முறையில் தொழில்நுட்ப உதவியுடன் கணினி அடிப்படையிலான பொதுத் தகுதித் தேர்வை நடத்தி, அலுவலர்களை பணியில் அமர்த்தும் முகமையாக இருக்கும்.

     புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இருபகுதிகளுக்கும் ஒட்டுமொத்த மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில், உதவிபுரிய அரசு உறுதிபூண்டுள்ளதாகக்  கூறிய நிதியமைச்சர், வரும் நிதியாண்டில் ஜம்மு-காஷ்மீருக்கு 30,757 கோடி ரூபாயும், லடாக்கிற்கு 5,958 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

     2022 ஆம் ஆண்டில் ஜி-20 உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

 

******



(Release ID: 1601530) Visitor Counter : 184


Read this release in: English , Urdu , Hindi