நிதி அமைச்சகம்

ஜி.எஸ்.டி மொத்த வரி வசூல் ஜனவரி மாதத்தில் ரூ.1,10,828 கோடியை எட்டியது

Posted On: 01 FEB 2020 2:08PM by PIB Chennai

இந்த ஆண்டு (2020) ஜனவரி மாதத்தில், சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி மொத்த வரி வசூல் 1,10,828 கோடி ரூபாய் அளவை எட்டியுள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி ரூ.20,944 கோடி, மாநில ஜி.எஸ்.டி ரூ.28,224 கோடி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி-யானது ரூ.53,013 கோடி (இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.23,481 கோடி உள்பட) ஆகும். 2020 ஜனவரி 31ஆம் தேதிவரை, டிசம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி வரியை திரும்பப் பெறுவதற்கான 3B பதிவு செய்தோர்  எண்ணிக்கை 83 லட்சமாகும்.

ஒருங்கிணைந்த வழக்கமான ஜி.எஸ்.டி வரியிலிருந்து மாநில ஜி.எஸ்.டி வரி ரூ.18,199 கோடியும், மத்திய ஜி.எஸ்.டி ரூ.24,730 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.  மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழக்கமான வரி ஒப்படைப்புக்குப் பின்னர், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மத்திய ஜி.எஸ்.டி ரூ.45,674 கோடியும், மாநில ஜி.எஸ்.டி ரூ.46,433 கோடியும் வருவாயாகப் பெறப்பட்டுள்ளது. 

உள்நாட்டு பரிவர்த்தனை மூலம் 2020 ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வருவாய் குறிப்பிடத்தக்க அளவுக்கு, வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு (2019) இதே மாதத்தைக் காட்டிலும் 12 விழுக்காடு உயர்வு ஆகும். இறக்குமதிப் பொருட்கள் மூலம் வசூலிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி-யைக் கருத்தில் கொண்டால், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், 2019 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 8 விழுக்காடு உயர்வாகும்.  இந்த மாதத்தில் இறக்குமதிப் பொருட்கள் மீதான ஒருங்கிணைந்த வரியானது, கடந்த ஆண்டுடன் (2019) ஒப்பிடுகையில், எதிர்மறையான வளர்ச்சியை அதாவது, -3 விழுக்காடாக உள்ளது. ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மாதாந்தர வரி வருவாய் இரண்டாவது முறையாக தற்போது ரூ.1.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.   மேலும், இந்த நிதியாண்டில் 6-வது முறையாக 1,00,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.  நடப்பாண்டில், தென்மாநிலங்களில் கிடைத்த ஜி.எஸ்.டி வருவாயைக் குறிப்பிடும் பட்டியல்:

எண்

 மாநிலம்

 ஜன-19

(கோடியில்)

ஜன-20

(கோடியில்)

வளர்ச்சி விகிதம்

1

கேரளா

1,584

1,859

17%

2

தமிழ்நாடு

6,201

6,703

8%

3

புதுச்சேரி

159

188

18%

4

தெலங்கானா

3,195

3,787

19%

5

ஆந்திரப்பிரதேசம்

2,159

2,356

9%

 

 

------



(Release ID: 1601524) Visitor Counter : 233