ரெயில்வே அமைச்சகம்
இந்திய ரயில்வேக்கு எரிசக்தி தற்சார்பை ஏற்படுத்த இந்தியா – பிரிட்டன் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
08 JAN 2020 3:18PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்தி மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சகத்திற்கு கூட்டம், இந்திய ரயில்வேக்கு எரிசக்தி தற்சார்பை ஏற்படுத்த இந்தியா – பிரிட்டனிடையே 02.12.2019 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ரயில்வே அமைச்சகமும், பிரிட்டிஷ் அரசின் சர்வதேச மேம்பாட்டுத் துறைக்கும் இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி, சூரிய மற்றும் காற்றாலை எரிசக்திக்கு இந்திய ரயில்வேயில் திட்டமிடுதல், எரிசக்தித் திறன் நடைமுறைகளை ஏற்றுக் கொள்ளுதல், எரிபொருள் திறனை மேம்படுத்துதல், மின்சார வாகன சார்ஜிங் கட்டமைப்பை மேம்படுத்துதல், பேட்டரியால் இயக்கப்படும் ரயில் என்ஜின்கள் போன்றவற்றுக்கு இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், பயிற்சித் திட்டங்கள், தொழில்துறை பார்வையிடல், களப்பணிகள் பார்வையிடல் போன்ற திறன் சார்ந்த வளர்ச்சி அல்லது வேறு வடிவங்களிலான ஒத்துழைப்புக்கு ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்வது என்றால் எழுத்துப்பூர்வமான தகவல் தெரிவித்து 6 மாதத்திற்குப் பின், விலக்கிக் கொள்ளலாம்.
இந்த ஒப்பந்தம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், விலக்கிக் கொள்ளப்பட்ட தேதிக்கு முன்னால் ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ள திட்டங்களின் அமலாக்கம், பாதிக்கப்படமாட்டாது.
இருதரப்பினருக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், பரஸ்பர பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாலோசனை மூலம் தீர்த்துக் கொள்ளப்படும்.
----
(Release ID: 1598753)
Visitor Counter : 107