ஜல்சக்தி அமைச்சகம்

2019 ஆம் ஆண்டின் செயல்பாடுகள்: நீர்வளத்துறை அமைச்சகம்

Posted On: 31 DEC 2019 5:37PM by PIB Chennai

தூய்மையே சேவை திட்டம் 2019:

 

      ‘பிளாஸ்டிக் கழிவு விழிப்புணர்வு மற்றும் மேலாண்மையை’ முக்கிய நோக்கமாகக் கொண்டு நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகாமை பிரதமர் திரு நரேந்திர மோடி மதுராவில் 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதியன்று தொடங்கிவைத்தார்.

      தூய்மையே சேவைத் திட்டத்திற்கு, மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளம், குடிநீர், சுகாதாரத்துறையும் உத்தரப்பிரதேச அரசும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.

 

தேசிய கங்கைக்குழுவின் முதலாவது கூட்டம்

 

     தேசிய கங்கைக்குழுவின் முதலாவது கூட்டம், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் டிசம்பர் 14-ஆம் தேதியன்று நடைபெற்றது.

      கங்கை மற்றும் அதன் கிளை நதிகளைப் புனரமைத்தல் மாசு தடுப்பு ஆகியவற்றைக் கண்காணிக்கும் ஒட்டுமொத்த பொறுப்பு இந்தக்குழுவுக்கு வழங்கப்பட்டது.  கங்கைக்குழுவின் முதல் கூட்டம் கங்கையை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளித்து மீண்டும் வலுவூட்டுவதையும் மாநிலங்களின் அனைத்துத்துறைகள் மற்றும் அதன் தொடர்புடைய அமைச்சகங்களில் செயல்படுத்துவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு நடைபெற்றது.

      கங்கையைத் தூய்மைப்படுத்தும் பல்வேறு பணித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்துப் பிரதமர் ஆய்வு செய்தார்.

 

 

 

 

தூய்மை இந்தியா விருதுகள்:

 

       புதுதில்லியில் செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற தூய்மைத் திருவிழாவில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், தூய்மை இந்தியா இயக்கத்தை வெகுவாக பாராட்டினார். மேலும், அவர் தூய்மை இந்தியா விருதுகளையும் அவர் வழங்கினார். பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட 1,300-க்கும் மேற்பட்ட தூய்மை வீரர்கள், தேசிய மாணவர் படையினர், தேசிய சேவைத்திட்ட தொண்டர்கள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உள்ளாட்சி அமைப்புகள், அமைச்சகங்கள் மற்றும் ஊடகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இப்பெரும் விழாவில் பங்கேற்றனர்.

 

6-வது இந்திய நீர்வார விழா – 2019

 

      குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் 6-வது இந்திய நீர்வார விழா – 2019-ஐ புதுதில்லியில் செப்டம்பர் 24-ஆம் தேதியன்று தொடங்கிவைத்தார்.  “21-ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்வதற்கு – நீர் ஒத்துழைப்பு” என்பதை நீர் வார விழா 2019 கருப்பொருளாகக் கொண்டிருந்தது.

 

நீர்வள மேம்பாட்டுத் திட்டம்:

 

      இந்தியாவில் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள வட்டங்கள் மற்றும் மாவட்டங்களில் நீர் சேமிப்புக்கான செயல்பாடுகளின் முன்னேற்றத்தை வேகப்படுத்த மத்திய – மாநில அரசுகள் கலந்தாய்வு செய்வதே நீர்வள மேம்பாட்டுத்திட்டமாகும்.

 

நீர் சேமிப்பு பற்றி குறித்த பிரதமரின் கடிதம் குறித்து நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் விவாதம்:

 

      நாடு முழுவதும் பருவமழைக் காலத்தில் தண்ணீரை சேமிப்பை அதிகரிப்பது மேம்படுத்துவது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி, அனைத்து உள்ளாட்சி நிர்வாகிகளுக்கும் கடிதம் எழுதினார்.  இந்தியாவின் கிராமப்புறங்களில் மழை நீரை சேமிப்பது குறித்தும், நீர் சேமிப்பு செயல்பாடுகள் குறித்தும் தமது கடிதத்தில் அவர் வலியுறுத்தியிருந்தார். ஜூன் 22-ஆம் தேதியன்று நாடு முழுவதும் உள்ள கிராம சபைகளைக் கூட்டி, கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் பிரதமரின் கடிதம் பொது மேடையில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.   

 

 

 

கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவாளர்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்:

 

      கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவாளர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 25-ஆம் தேதியன்று, அவர்களில் 5 பேரின் பாதங்களை நீரால் கழுவி சுத்தம் செய்தார். இந்த செயல், “துய்மைக் கும்பம், தூய்மை ஆபார்” திட்டத்தின் ஒரு பகுதியாகும். அங்கு பிரதமர் 10,000 தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டவர்கள் இடையே உரையாற்றினார். 

 

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், தூய்மை கங்கை கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டங்களை தீனாப்பூர், ரமணா ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்:

     

      ஜுன் 18-ஆம் தேதி வாரணாசிக்கு சென்றிருந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், அங்கு நடைபெற்று வரும் தூய்மை கங்கா திட்டங்களை ஆய்வு செய்தார். நாளொன்றுக்கு 140 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்தம் செய்யும் தீனாப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்தையும் பார்வையிட்டார். அவருடன் தூய்மை கங்கை தேசிய இயக்கத்தின் தலைமை இயக்குனர் திரு ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா சென்றிருந்தார்.

 

ரிஷிகேஷ் மற்றும் ஹரித்துவாரில் நடைபெற்றுவரும் திட்டங்களை திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஆய்வு செய்தார்:

 

     ரிஷிகேஷ் மற்றும் ஹரித்துவாரில் நடைபெற்றுவரும் தூய்மை கங்கைத் திட்டங்களை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஆய்வு செய்தார். சராய் கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து இத்திட்டத்தின் மாதிரி வடிவத்தின் மூலம், அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

 

நீர் சேமிப்புக்கான நீர்வள திட்டம் தொடக்கம்:

 

      மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஜூலை ஒன்றாம் தேதி நீர்வள மேம்பாட்டுத் திட்ட முகாம் தொடங்கப்பட்டிருப்பதை அறிவித்தார்.  நீர் சேமிப்புத் திட்டம், நீர் பாதுகாப்புக்கான முகாமாகும் இது. 

 

 

 

தேசிய நீர் இயக்க விருதுகள் 2019:

      நீர் சேமிப்பு, பல்வேறு தேவைகளுக்கான நீர் பயன்பாடு ஆகியவை இந்தியாவில் நீர் தேவைக்கான சவால்களை எதிர்கொள்வதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.  புதுதில்லியில் செப்டம்பர் 25-ஆம் தேதியன்று தேசிய நீர் இயக்க விருதுகளை வழங்கி உரையாற்றிய அவர், வேளாண்மை மற்றும் தொழில்துறைகளில் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் அரிதாக கிடைக்கும் நீரின் அளவை, கொள்கை வகுப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

திரு நிதின்கட்கரி ஆக்ரா மற்றும் மதுராவில் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்:

 

       மத்திய நீர்வளம், நீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு, சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு நிதின்கட்கரி, ஆக்ரா மற்றும் மதுராவில் 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதியன்று கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  மதுராவில் ரூ.511.74 கோடி ரூபாய் செலவில் 4 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டங்களும் இதில் அடங்கும்.

 

ஹரித்துவாரில் சண்டிகட்டில் ரூ. 5.894 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்து திரு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்

 

மத்திய நீர்வளம், நீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு, சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு நிதின்கட்கரி ஹரித்துவாரில் சண்டிகட்டில் ரூ. 5.894 கோடி மதிப்பிலான திட்டங்களை பிப்ரவரி 21-ஆம் தேதியன்று தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்.

 

நீர்வளத் திட்டம் மக்கள் இயக்கமாக மாறுகிறது:

 

      நீர்வளத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை மத்திய அமைச்சரவைச் செயலாளர் திரு பிரதீப் குமார் சின்ஹா ஆகஸ்ட் 26-ஆம் தேதியன்று, ஆய்வு செய்தார்.  நாடு முழுவதும் மிகவும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள 256 மாவட்டங்களுக்கு மத்திய அரசின் 1,100 அலுவலர்கள் கள ஆய்வுக்காக சென்றிருந்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் மேற்கொண்ட இரண்டாவது பயணமாகும் இது. நீர்வள மேம்பாட்டுத்திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அலுவலர்கள் உறுதிபூண்டு மேற்கொண்டுவரும் முயற்சிகளை அவர் பாராட்டினார் .

 

தூய்மை கங்கைத் திட்டத்தின்கீழ் யமுனாவில் ரூ1,387.71 மதிப்பிலானத் திட்டங்களுக்கு ஒப்புதல்:

 

      பிப்ரவரி 15-ஆம் தேதி 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற 20-வது நிர்வாகக்குழக் கூட்டத்தில் யமுனா நதியையொட்டி உள்ள இடங்களில் ரூ. 1,387.71 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் இதரத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.  கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டங்களுக்கான கட்டுமானப்பணிகள் மற்றும் புதுப்பித்தல் திட்டங்கள் இதல் அடங்கும.

 

கழிப்பறைக்கு வண்ணம் பூசுக:

 

      தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், கழிப்பறைகளை நீடித்து உழைக்கும் வகையில், சுத்தமாக வைத்திருப்பதையும், அவற்றைத் தூய்மையாக வைத்திருப்பதையும் ஊக்கப்படுத்தும் முயற்சியாகக் ‘கழிவறையை அழகுப்படுத்துதல்’ என்ற ஒருமாத கால முகாம் 2019 ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து நடத்தப்பட்டது.

      இந்த முகாமில் குடும்பங்களில் உள்ளவர்களை திரட்டி, கழிப்பறைகளை வண்ணம் தீட்டி, அழகுபடுத்தி வைப்பது குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்தப்பணிகளை உள்ளாட்சி அமைப்பு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டனர்.  

 

*****


(Release ID: 1598225) Visitor Counter : 203


Read this release in: English , Hindi , Bengali