கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

மாலுமிகள் சான்றிதழ்களை அங்கீகரிப்பது குறித்த இந்தியா-ஸ்வீடன் இடையிலான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 24 DEC 2019 4:44PM by PIB Chennai

பயிற்சி, சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புத் தரங்கள் பற்றிய 1978-ஆம் ஆண்டு, சர்வதேச ஒப்பந்தத்தின்படி, மாலுமிகள் சான்றிதழ்களை அங்கீகரிப்பது குறித்த இந்தியா-ஸ்வீடன் இடையிலான ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் வழங்கியது.

 

இருநாட்டு அரசுகளும் வழங்கிய மாலுமிகளுக்கான மருத்துவத் தகுதி சான்றிதழ் மற்றும் கடல்பயணக் கல்வி மற்றும் பயிற்சி, திறன் சான்றிதழ்கள், ஆவண அத்தாட்சிகள் ஆகியவற்றை அங்கீகரிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. மாலுமிகளின் பயிற்சிச் சான்றளிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவை பற்றிய இருநாடுகளுக்கு  இடையிலான ஒத்துழைப்பு குறித்த பயிற்சி, சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு தரங்களுக்கான 1978-ஆம் ஆண்டு, சர்வதேச ஒப்பந்தத்தின் 1/10-வது விதிமுறைகளின்படி, இத்தகைய அங்கீகாரம் அவசியமாகிறது.

 

இந்த ஒப்பந்தத்தால் இருநாடுகளும் பயனடையும்.  கப்பல்களைக் கொண்டுள்ள நாடு என்ற வகையில், ஸ்வீடனும், மாலுமிகளை வழங்கும் நாடு என்ற முறையில் இந்தியாவும் இந்த ஒப்பந்தத்தால் பயனடையும்.

*******


(வெளியீட்டு அடையாள எண்: 1597813) வருகையாளர் எண்ணிக்கை : 132
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada