பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
திவால் மற்றும் நொடித்துப் போதல் (திருத்த) அவசரச் சட்டம் 2019-ஐ பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
24 DEC 2019 4:45PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், திவால் மற்றும் நொடித்துப் போதல் விதிமுறைகள் 2016-ல் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட திருத்தத்தின் மூலம் திவால் மற்றும் நொடித்துப் போதல் விதிமுறைகள் 2016-ல் இடம்பெற்றுள்ள தெளிவற்ற தன்மையைப் போக்கவும், இந்த விதிமுறைகள் சுமூகமாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் வழிவகை ஏற்படும்.
இந்த திருத்தத்தின்படி, கடன் சுமைக்கு ஆளான பெரும் தொழில் நிறுவனம், திவால் நடவடிக்கைகளை தொடங்குவதற்கு முன்பு இழைத்த குற்றங்கள் முடிவுக்கு கொண்டு வரப்படுவதோடு, அந்த கடன்தாரர் மீது குற்றவழக்கு தொடரப்பட மாட்டாது.
********************
(Release ID: 1597482)